நாடோடி மன்னன்’ படத்தில் நடிகை பானுமதி நடித்த போது, அவருக்கும் எம்.ஜி.ஆரும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் இருந்து பாதியில் பானுமதி விலகிக் கொள்ள, நாயகியை தேடுகிறார்கள். பெங்களுரில் நிகழ்ச்சி ஒன்றில் சரோஜா தேவியை பார்த்த இயக்குனர், இவர் எம்ஜிஆருக்கு பொருத்தமாக இருப்பார் என நாடோடி மன்னன் திரைப்படத்தில் அவரை அறிமுகம் செய்தார்.
சரோஜாதேவி நாயகியாக நடித்த முதல் படத்திலேயே ‘ பிரம்மாண்ட வெற்றி பெற சரோஜாதேவி உச்சத்துக்கு சென்றார். ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தார்கள். எம்.ஜி.ஆர் உடன் மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன். ஜெமினி கணேசன். எஸ்.எஸ்.ஆர் என அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த பெருமை சரோஜா தேவியை சேரும்.

எம்ஜிஆர், சிவாஜி உடன் பல திரைப்படங்களின் நடித்த போதும் அவர்களுடன் எந்த வித கிசு கிசுவிலும் சிக்காமல் இருந்தார் சரோஜாதேவி. அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு இருந்த சரோஜா, ஸ்ரீ ஹர்ஷா என்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சரோஜா தேவி நடிக்க மறுத்தார். ஆனால், ஸ்ரீ ஹர்ஷாவா திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதில் எந்த தவறு இல்லை என கணவர் சொல்லியதால், திருமணத்திற்கு பின்னும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.
அதன் பின், எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதலமைச்சரான பின், சரோஜா தேவியை அழைத்து அமைச்சர் பதவி தருகிறேன் என்று சொல்லிய போதும், அதை வேண்டாம் என்று மறுத்தார். இதை பல பேட்டிகளில் சரோஜா தேவியே சொல்லி இருக்கிறார் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெறும் 15 ஆண்டுகளில் நடித்தவர் தான் சரோஜாதேவி. இப்போது எல்லாம் ஒரு படம் முடித்து விட்டு தான் நாயகிகள் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள்.
ஆனால் ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்தவர் சரோஜாதேவி என்கின்றனர். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் சூட்டிங்கில் இருப்பாராம். ஒரு படத்திற்கு மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் எனக் கூட கால் சீட் கொடுத்ததாக கூறுகின்றனர். எம்ஜிஆரே சரோஜாதேவியின் வரவுக்காக படப்பிடிப்பு தளத்தில் காத்துக்கொண்டிருப்பாராம். சினிமா சூப்பர் ஸ்டார்கள், இமாலய இயக்குநர்களுடன் பணிபுரிந்தாலும் இதுவரை எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர்.
குறிப்பாக பல முன்னணி நடிகர்கள் சரோஜாதேவியை காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருக்கின்றனர். ஆனால் யாருடைய காதலையும் ஏற்றுக் கொள்ளவில்லை. திரைத்துறையைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என சரோஜா தேவி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்றால் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே கலைத்துறையில் இருந்து வரும் நபர்களை நான் திருமணம் செய்யக்கூடாது.
உனக்கு பின்பும் குழந்தைகள் இருக்கிறார்கள். என எங்க அம்மா சொன்னார். அதன் காரணமாகவே நான் திரைத்துறையைச் சேர்ந்தவர்களை காதலிக்கவில்லை என்றார். சினிமாவில் உயரிய இடத்தில் இருந்த சரோஜா தேவி, தான் இறந்த பின்பு கூட இவ்வுலகை காண வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். இதன் காரணமாக இறக்கும் முன்னரே தன் கண்களை தானமாக வழங்கியிருக்கிறார்.
இதையடுத்து, அவர் உயிரிழப்பிற்கு பின்னர் பெங்களூருவில் உள்ள நாராயணா நேத்ரா மருத்துவமனைக்கு சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த கண்கள், இரு குழந்தைகளுக்கு பொறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறந்த பின்பும் இன்னொரு உயிர் மூலம் சரோஜா தேவி கட்வுள் போல் வாழ்ந்து வருகிறார்.