மண்ணை கவ்வி படுதோல்வியை சந்தித்த விஜய்… கேக் வெட்டி கொண்டாடிய சமந்தா..! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெளியான படம் பீஸ்ட், இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைத்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததால் பீஸ்ட் படத்துக்கு மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வியது, படம் வெளியான அடுத்த நாளே திரையரங்குகள் காற்று வாங்கியது. மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கூட பீஸ்ட் படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. விஜய் சினிமா கேரியரில் சுறா, பைரவா போன்ற மொக்க பட வரிசையில் இடம் பிடித்தது பீஸ்ட், இதுவரை பீஸ்ட் படம் உண்மையான வசூல் எவ்வளவு என அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தமிழில் அறிமுகமான படம் முகமூடி , இந்த படத்தை மிஸ்கின் இயக்கியிருந்தார், ஜீவா நடித்திருந்தார், முகமூடி படு தோல்வியை தழுவியதை தொடர்ந்து, பூஜா ஹெக்டே ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு, அடுத்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. தெலுங்கை பூர்விகமாக கொண்ட பூஜா ஹெக்டே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு படத்தில் நடிக்க தொடங்கினர்.

தெலுங்கில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது சமந்தா தான், இந்த படத்தில் நடிக்க படத்தின் கதை மற்றும் சம்பளம் வரை பேசி முடிக்கப்பட்ட நிலையில் தீடிரென பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, சமந்தாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடைய வாய்ப்பை தட்டி பறித்த பூஜா ஹெக்டே மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் சமந்தா.

மேலும் தெலுங்கு சினிமாவில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையில் அடிக்கடி உரசல் இருந்து வந்துள்ளது. மேலும் தொழில் ரீதியாக இவர்களுக்குள் போட்டியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் இருவருக்கும் இடையில் இருந்த உரசல், பீஸ்ட் படத்தில் சமந்தா வாய்ப்பை பூஜா ஹெக்டே தட்டி பறித்தது மேலும் உரசல் பற்றி கொண்டது. இதனை தொடர்ந்து பீஸ்ட் படம் வெற்றி பெற்று இருந்திருந்தால்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்திருப்பார் பூஜா ஹெக்டே, ஆனால் பீஸ்ட் படுதோல்வியை தழுவியதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியுள்ளார் பூஜா ஹெக்டே, இது சமந்தாவுக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. பீஸ்ட் பட தோல்வியை கொண்டாடும் விதத்தில் தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் சமந்தா என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?