அட்ஜெட்ஸ்மென்ட்க்கு என்ன ரெட்… ஓப்பனாக பேசிய நடிகை ரேகா நாயர்…

0
Follow on Google News

பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் படத்தில் நடித்த நடிகை ரேகா நாயர் குறித்து தவறாக ஒரு முறை பேசியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். அவருடைய தனிப்பட்ட வாழ்கை குறித்தும் அவருடைய ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுப்பும் வகையில் பயில்வான் பேசியிருந்த நிலையில்,வழக்கம் போல் காலை நடைப்பயிற்சிக்கு சென்றிருந்த பயில்வானிடம் நேரில் சந்தித்தும் பொதுமக்கள் மத்தியில் சண்டையிட்டார் ரேகா நாயர்.

உன் வீட்டுப் பெண்களை இப்படி பேசுவியா.? என கேட்ட ரேகா நாயர். மேலும் என்னைப் பற்றி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கின்றது. உன் வீட்டுப் பெண்களைப் பற்றி இப்படி பேசி இருக்கின்றாயா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன் மகள் என்ன செய்கிறது என்று உனக்குத் தெரியுமா.? காண்டம் அது இது என்று என்னை பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றாய். சினிமாவில் நடிக்கும் நடிகரைப் பற்றி பேசி அதில் வரும் பணத்தில் நீ உயிர் வாழக்கூடாது.

நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் நான் உன் பிள்ளையா.? உன் பொண்டாட்டியா.? வயதுக்கு கூட மரியாதை தரமாட்டேன். என்னைப் பற்றி பேசுவது உனக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் அம்மணமாக நடிப்பேன், சினிமாவில் என்ன வேண்டுமென்றாலும் நான் செய்வேன். உனக்கு என்ன வந்தது, நீ என்ன விளக்கு பிடித்தாயா? இல்லை கூட்டிட்டு போனியா.? செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல். நான் அவுத்துப் போட்டு நிற்பேன் உனக்கு இஷ்டம் இருந்தால் பார்.

நீ தான் பக்கத்தில் உட்கார்ந்து விளக்குப்படுத்தியா.? காண்டம் பயன்படுத்துகிறேன், விபச்சாரி என்று இப்படியெல்லாமா பேசுகிராய், நீ என்னை கூட்டிட்டு போனியா, விபச்சாரி என்று சொல்வதற்கு உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கிறது. அம்மணமாக நடித்தால் என்ன வேண்டுமென்றாலும் நீ பேசுவியா.? கழட்டி போட்டு நிற்கிறேன் நீ பார்க்கிறாயா.? என ரேகா நாயர் கேட்க, அதற்கு சீ..சீ.. என்று கண்ணை முட்டிக்கொண்டு ஓடிவிட்டார் பயில்வான் ரங்கநாதன்.

இந்நிலையில் அட்ஜஸ்மெண்டுகள் குறித்து சமீபத்தில் பேசிய ரேகா நாயர், பட வாய்ப்புகாக அட்ஜஸ்மெண்டுக்கு போக வேண்டும் என்றால், அதுவும் இல்லாமல் படுக்கையின் மீது ஆசை இருந்தால் அதற்காக ஒருவரை கண்டுபிடித்து போங்க, அதைவிட்டு விட்டு நான் வருகிறேன் நீ யாரிடமும் சொல்லிவிடாதே என்று சொல்வது ஏமாற்று வேலை. இதில் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பவர்கள் அட்ஜஸ்ட்மென்ட்க்கு போகிறவர்கள் என இரண்டு பேருமே அனுபவிக்கிறார்கள். இது சினிமா துறையில் நடக்கும் மிகப்பெரிய அரசியல் என தெரிவித்த ரேகா நாயர்.

மேலும், என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வீர்களா என பல பேர் கேட்டு இருக்கிறார்கள் அவர்களிடம், நான் எவ்வளவு கொடுப்பீங்க, இவ்வளவு தான் கொடுப்பீர்களா? என்னுடைய உடம்பிற்கு இவ்வளவுதான் மதிப்பா என்று கேட்டிருக்கிறேன். இப்படி நான் பேச தொடங்கியதுமே எதிரில் இருப்பார்கள் சாரி மேடம் என்று சென்று விடுவார்கள் என பேசிய ரேகா நாயர்.

மேலும் என் உடலை திறந்து காட்ட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் திறந்து காட்டுவேன், அதை நீ என்னிடம் திறந்து காட்டு என்று சொல்லக்கூடாது என பேசிய ரேகா நாயர். இந்த சினிமாவிற்கு நான் வந்தது என்னுடைய அழகையும், என்னுடைய திறமையையும் வெளிக்காட்டி அதன் மூலமாக ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தான் தவிர படுப்பதற்காக இல்லை என்று ரேகா நாயர் பேசியது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here