விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் நடவடிக்கைகள் அனைத்தும், அட பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடந்து கொள்கிறார்களே என சினிமாத்துறையின் காரி துப்புவது போன்று அமைந்து வருகிறது. இதனால் சினிமா துறையில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், என அந்தந்த துறையில் இருக்கும் முக்கிய நபர்கள் அனைவரும், நயன்தாரா சினிமாவில் இருந்து துடைத்து எறியப்படும் நாட்களை எண்ணி கொண்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பிரபுதேவா உடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பின்பு ராஜா ராணி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. இந்த படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, ஜெய், நஸ்ரியா , நயன்தாரா என அனைவரின் நடிப்பும் பாராட்டு தக்க வகையில் இருந்தது, ஆனால் தனியார் தொலைக்காட்சி ஓன்று, ராஜாராணி படம் வெளியான பின்பு அடிக்கடி நயன்தாராவை அழைத்து நேர்காணல் நடத்தி, நயன்தாரா ரீ- என்ட்ரி மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என ஒரு பிம்பத்தை கட்டியமைத்தது.
மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என அவர்களே நயன்தாராவுக்கு ஒரு அடைமொழியை கொடுத்து பில்டப் கொடுத்தனர், அந்த தனியார் தொலைக்காட்சியின் இந்த செயற்கையான செயல்களுக்கு பின்னனியில் நயன்தாரா இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்த நயன்தாரா, தன்னுடைய மேனேஜர், பாடி கார்ட், உதவியாளர் என நயன்தாராவுக்கு ஆல் ரவுண்டர் ஆனார் விக்னேஷ் சிவன்.
தொடர்ந்து ஹிட் படங்களில் நயன்தாரா நடிக்க, கிடு கிடுவென நயன்தாராவின் சம்பளத்தை ஏற்றினார் விக்னேஷ் சிவன் அதுமட்டுமல்ல நயன்தாரா படத்தில் நடிக்க தனக்கு தனியாக கமிஷன் வேண்டும் என படத்திற்கு ஒரு கோடி வரை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. நயன்தாரா படத்தில் நடிக்க இவனுக்கு எதுக்கு கமிஷன்,எல்லாம் தலையெழுத்து என தலையில் அடித்து கொண்டு விக்னேஷ் சிவனுக்கும் கப்பம் கட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தை ஒரு குறிப்பிட்ட தொகையில் ரவுடி பிக்சர் சார்பில் முடித்து தருவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரிடம் தெரிவித்து அதற்கான பணத்தை பெற்றுள்ளனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா, ஆனால் படத்தை முடிந்த பின்பு அதிகமாக 5 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது அதனால் கூடுதலாக 5 கோடி வேண்டும் என விக்னேஷ் சிவன் கேட்க.
அதலாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார் லலித் குமார், அதன் பின்பு சார் 4 கோடி ..முடியாது.. சார் 3 கோடி… முடியாது… சார் 2 கோடி …முடியவே முடியாது ஏற்கனவே பேசிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகம் தர முடியாது என லலித் குமார் பிடிவாதம் பிடிக்க. பின்பு பிச்சைக்கார்களை விட படு கேவலமாக கெஞ்சி சார்.. ப்ளீஸ்.. என நச்சரித்துள்ளார் விக்னேஷ் சிவன். இதன் பின்பு தொல்லை தாங்க முடியாமல் இந்த ஒரு கோடி என ஏற்கனவே பேசிய பணத்தை விட அதிகம் கொடுத்துள்ளார் லலித் குமார் என கூறப்படுகிறது.