நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ஒரு பக்கம் அவருடைய படம் தொடர் தோல்வியை சந்தித்து வந்தாலும், மறுபக்கம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில் ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பை சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மத கஜ ராஜா படம் ரிலீஸ் ஆன உடனே தொடங்குவதற்கான ஏற்பாடுகளை சுந்தர் சி செய்து வந்தார். ஆனால் நயன்தாரா நான் ரொம்ப பிசி, எனக்கு மலையாளத்தில் படம் இருக்கிறது, இந்தியில் படம் இருக்கிறது என்று தற்பொழுது நயன்தாரா கைவசம் மிகப்பெரிய அளவில் படம் இல்லை என்றாலும் இப்போதைக்கு என்னால் டேட் கொடுக்க முடியாது என்று நயன்தாரா இழுத்தடிக்க,

ஒரு கட்டத்தில் சுந்தர் சி படத்தின் தயாரிப்பாளரிடம் பரவாயில்லை நயன்தாரா எப்போது வேண்டுமானாலும் வரட்டும், வரும்போது எனக்கு சொல்லி அனுப்புங்கள் அதற்குள் நான் விஷாலை வைத்து ஒரு படம் இயக்கி விட்டு வருகிறேன் என்று சுந்தர் சி தெரிவித்திருக்கிறார், இதனை தொடர்ந்து நயன்தாராஎன்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று தொடர்ந்து ஒரு மாதம் மூக்குத்தி அம்மன் படத்திற்கு கால் செய்த தருகிறேன் என்று தயாரிப்பாளர் இடம் தெரிவித்திருக்கிறார்.
உடனே தயாரிப்பாளர் இந்த படத்தை தொடங்குவதற்காக சுந்தர்சியிடம் பேசியிருக்கிறார், அதே நேரத்தில் விஷாலை வைத்து சுந்தர் சி எடுக்கும் புதிய படத்தில் விஷால் மதகஜராஜா வெற்றிக்கு பின்பு சம்பளத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தி இருக்கிறார், இதனால் அந்த படம் தொடங்காமல் தடையாக இருந்திருக்கிறது.
உடனே சுந்தர் சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் டு படைப்பிற்கான வேலையை தொடங்கி இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், அதற்கு இணையான ஒரு வில்லன் கதாபாத்திரமும் உள்ளது. யாரை நடிக்க வைக்கலாம் என்று சுந்தர் சி ஆலோசித்து வரும் நிலையில், நயன்தாரா இந்த படத்தில் தனக்கு வில்லனாக அருண் விஜய் தான் வேண்டும் என்று அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அருண் விஜய் எதற்காக தன்னுடைய படத்தில் வில்லனாக கமிட் செய்ய சொல்கிறார் நயன்தாரா என்கின்ற பின்னணி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது நயன்தாராவுக்கும் தனுசுக்கும் இடையிலான பிரச்சனை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தில் அருண் விஜய் தான் ஹீரோவாக நடிக்கிறார்.
அந்த வகையில் தனுஷ் படத்தின் ஒரு ஹீரோவை தனக்கு வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என்கின்ற ஒருவித தனுஷ் மீதுள்ள போட்டிதான் நயன்தாரா தனக்கு வில்லனாக அருண் விஜய் வேண்டும் என அடம்பிடிக்க காரணம் என்கிறது சினிமா வட்டாரங்கள். இந்த நிலையில் இன்று அருண் விஜய் ஹீரோ இமேஜை விட்டுக் கொடுத்து அதுவும் ஒரு நடிகைக்கு வில்லனாக நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார்.
இருந்தாலும் சுந்தர் சி தரப்பில் அருண் விஜயி டம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இன்னும் அருண் விஜய் உறுதியாக இந்த தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா செய்யும் அட்ரா சிட்டிகளை பார்க்கும் சினிமா துறையினர் இவரை திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் நிலைமை தான் பாவம் என்று முணுமுணுத்து வருவதாக கூறப்படுகிறது