நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. கோவில் அர்ச்சகர் மகளான கதாநாயகி நயன்தாரா, சமையல் செஃப் ஆக வேண்டும் என்ற கனவோடு தனது குடும்பம் மற்றும் சமையல் துறையில் இருக்கும் சவால்களை எல்லாம் மீறி நயன்தாரா தன் கனவை அடைவாரா என்பதே இப்படத்தின் கதை.
இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போல இடம்பெற்ற கட்சிகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்து அமைப்பை சேர்ந்த ரமேஷ் சோலங்கி மத உணர்வை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
இதை அடுத்து பல்வேறு இந்து அமைப்புகளும் அன்னபூரணி படத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தது, குறிப்பாக வட இந்தியாவில் இருந்து அன்னபூரணி படத்திற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. இதனால் தயாரிப்பு நிறுவனம்a netflix தளத்திலிருந்து தற்காலிகமாக அன்னப்பூரணி படத்தை ஒளிபரப்புவதை நிறுத்தியது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கைவெளியிட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் கதாநாயகி நயன்தாராவும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெய் ஸ்ரீராம்….எனது நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த சில நாட்களாக சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
‘அன்னபூரணி’ திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே ‘அன்னபூரணி’ திரைப்படத்தை நாங்கள் எடுத்தோம், அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம் என தெரிவித்த நயன்தார.
மேலும், தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மற்றவர் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும, மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என்று நயன்தாரா அறிக்கை வாயிலாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொதுவாக இது போன்று குறிப்பிட்டு இந்து மதம் குறித்து சினிமா காட்சியில் இடம்பெறும் சர்ச்சைகள், தமிழக அளவில் மட்டுமே இருந்திருந்தால், அது அந்த படத்திற்கு விளம்பரமாக அமையும், ஆனால் அன்னப்பூரணி படத்திற்கு இந்தியா அளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டதில் விளைவின் காரணமாக, இதை வளரவிட்டால், மிக பெரிய பின்விளைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே நயன்தாரா மன்னிப்பு கேட்டிருப்பார் என விமர்சனம் எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..
.