நடிகர் தனுஷ் நயன்தாரா இருவருக்கும் இடையிலான நட்பு என்பது ஒரு நட்பை தாண்டிய உறவு என்று சொல்லும் அளவிற்கு சினிமா வட்டாரங்களில் ஒரு காலகட்டத்தில் நயன்தாராவும் தனுசுக்கு இடையிலே கிசுகிசுக்கள் பரவலாக பரவியது. அந்த அளவிற்கு தனுசும் நயன்தாராவும் மிக நெருக்கமாக இருந்தார்கள். அதாவது தனுஷிற்கு பணம் தேவைப்படும் பொழுது சில கோடிகள் நயன்தாராவிடம் வாங்கி இருக்கிறார்.
தனுஷ்க்கு நடிகை நயன்தாராவும் பணம் கொடுத்து உதவி இருக்கிறார். அந்த அளவுக்கு தனுஷ் நயன்தாரா இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு வலுவான நட்பு இருந்து வந்துள்ளது. நடிகர் தனுஷ் அவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்கின்ற ஒரு படத்தை எடுத்த போது, அந்த காலத்தில் நடிகை நயன்தாரா மிகப் பெரிய டாப் நடிகையாக இருந்தார். ஆனால் எதிர்நீச்சல் படத்தில் நடிகை நயன்தாரா ஒரு பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும் என்று தனுஷ் விரும்பியதால் தனுஷின் நட்பிற்காக வந்து எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் நடனம் ஆடிவிட்டு பணம் கூட தனுஷிடம் வாங்காமல் சென்றிருக்கிறார் நயன்தாரா.
அந்த அளவிற்கு நயன்தாராவிற்கும் தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய ஒரு ஆழமான நட்பு இருந்திருக்கிறது. குறிப்பாக எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் காலகட்டத்தில், ஒரு பிரபலம் இல்லாத ஒரு நடிகர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நயன்தாரா அந்த படத்தில் வந்து ஒரு பாடலுக்கு ஆடினார் என்றால் அது தனுஷ் தயாரிக்கின்ற படம், தனுஷ் மீது இருந்த நட்பின் காரணமாகத்தான் நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி விட்டுச் சென்றார்.
அந்த வகையில் நட்பை தாண்டிய மிகப்பெரிய ஒரு நெருங்கிய உறவு நயன்தாராவிற்கும் தனுசுக்கும் இருந்திருக்கிறது இப்படி நயன்தாராவிற்கும் தனுசுக்கும் இடையிலான நட்பை தாண்டிய உறவு எந்த இடத்தில் விரிசல் ஆனது என்றால் அதற்கு காரணம் விக்னேஷ் சிவன் தான் என்று கூறப்படுகிறது.
அதாவது நடிகர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் க்கு நண்பராக சில காட்சிகளில் விக்னேஷ் சிவன் நடித்திருப்பார், அந்த வகையில் தனுஷ் ஏற்பட்ட பழக்கம் காரணமாக போடா போடி என்கின்ற ஒரே படத்தை இயக்கி பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்னேஷ் இவனுக்கு நானும் ரவுடிதான் என்கின்ற படத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் வாய்ப்பு கொடுக்கிறார் தனுஷ்.
அந்த காலகட்டத்தில் நயன்தாராவுடன் தனுஷ் மிகவும் நட்பை தாண்டிய நெருங்கிய உறவில் இருந்ததால் அந்த படத்தில் நயன்தாரா உள்ளே வந்தால் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஹைப் கிடைக்கும் என்பதற்காக தனுஷ் தயாரிக்கிறார் என்பதற்காக தான், விக்னேஷ் சிவன் பிரபலம் இல்லாத இயக்குனராக இருந்தாலும் அந்த படத்தில் நடிக்க கமிட்டானார் நயன்தாரா.
ஆனால் அந்தப் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் காதல் ஏற்படம் இது அந்த படப்பிடிப்பில் பல குளறுபடிகளுக்கு காரணம் ஆகிவிட்டது. இதனால் ஒரு தயாரிப்பாளராக தனுசுக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தான் இன்று இந்த அளவிற்கு நயன்தாரா – தனுஷ் இடையே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
அந்த வகையில் நயன்தாரா தனுஷ் இவர்களுக்கு இடையில் மிகப்பெரிய அளவில் நட்பை தாண்டிய உறவு இருந்து வந்த நிலையில், அதை இடையில் புகுந்து மிகப்பெரிய பிரச்சனை வருவதற்கு காரணமே விக்னேஷ் சிவன் தான் எனக் கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.