நடிகர் அஜித் படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார் என்று இவ்வுலகிற்கு தெரிந்த பின்பு, மேலும் அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கின்ற கூடுலும் தகவலும் வெளியாகி, மேலும் நடிகர் சந்தானம் காமெடி நடிகராக விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித் படத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்
அவருக்கு சம்பளம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை பேச ப்பட்டது என்ற விக்னேஷ் சிவன் அஜித் படத்திற்கான அப்டேட் நாளுக்கு நாள் வந்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனை நேரில் அழைத்து படத்தின் முழு கதையை கேட்ட அஜித், இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை என நிராகரித்து விட்டார்.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/ajithkumar-nayanthara-1024x576.jpg)
ஏற்கனவே படத்தில் கமிட் ஆகும்போதே விக்னேஷ் சிவனிடம் முழு கதையும் கேட்டுவிட்டு கமிட்டான நடிகர் அஜித், ஒரு ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டமிட்டு விக்னேஷ் சிவனை அந்த படத்திலிருந்து நடிகர் அஜித் வெளியேற்றியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். கடைசி நேரத்தில் கதையை ஒரு காரணமாக காட்டி விக்னேஷ் சிவனை தன்னுடைய படத்திலிருந்து வெளியேற்றி உள்ளார் அஜித்,
ஒரு உச்ச நடிகர் படத்தில் கமிட்டாகி கதை பிடிக்கவில்லை என ஒரு இயக்குனர் வெளியேற்றப்பட்டதால். அந்த இயக்குனரின் சினிமா கேரியர் என்ன ஆகும் என்பதை சற்றும் யோசிக்காத அஜித், விக்னேஷ் சிவனை வெளியேற்றதின் விளைவு இதுவரை விக்னேஷ் சிவன் அடுத்து எந்த ஒரு படமும் பண்ண முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவனை அஜித் வெளியேற்ற முடிவு செய்த போது அஜித்தை தொடர்பு கொண்டு அவரை கன்வின்ஸ் செய்து விடலாம் என தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நயன்தாரா.
சார் கதையில் எதாவது பிரச்சனை என்றால் வேறு ஒரு கதையை விக்கி தயார் செய்வார், ஒரு படத்தில் கமிட் செய்துவிட்டு சுமார் 8 மாதம் அதற்காக வேலையும் செய்துவிட்டு, திடீரென கதை பிடிக்கவில்லை என ஒரு இயக்குனரை மாற்றினால், அவருடைய சினிமா எதிர்காலம் பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் என நயன்தாரா எவ்வளவோ அஜித்திடம் கண்ணீர் மல்க கெஞ்சியதாக கூறப்படுகிறது.
இப்படி நயன்தாராவே நேரடியாக அஜித்தை பலமுறை தொடர்பு கொண்டு விக்னேஷ் சிவனை வெளியேற்றுவது பற்றி மறு பரிசீலனை செய்யுங்கள் என கேட்டுள்ளார். மேலும் உங்கள் கையில் தான் விக்னேஷ் சிவன் சினிமா கேரியரே அடங்கியுள்ளது என்று அஜித்திடம் எவ்வளவோ நயன்தாரா கெஞ்சி கேட்டும் அஜித் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில் விடாமுயற்சி படம் தொடங்கியது முதல் பல தடைகளை சந்தித்து, திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, இதனால், நயன்தாராவின் பாவம் தான் விடாமுயற்சி படம் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றும், அந்த வகையில் நயன்தாரா மனதளவில் பாதிக்கப்பட்டு விடுத்த சாபம் தான் விடாமுயற்சி படத்திற்கு இந்த நிலை என்கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.