நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரட்டியடிப்பு…. திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்… அசிங்கப்பட்டு திருப்பிய பரிதாபம்..

0
Follow on Google News

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் சினிமா முக்கிய பிரபலங்கள் முன்னிலையில், மிக சிறப்பாக நடைபெற்றது. திருமண நிகழ்வுக்கு வருகின்றவர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தால், திருமண நடைபெற்ற நுழைவு வாயிலில் சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மிக குறைந்த அளவு அழைப்பிதழ் மட்டும் கொடுத்த நிலையில், பல முன்னணி நடிகர்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பெரும்பாலும் சினிமா துறையை சேர்ந்த யாரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. திருமணம் முடிந்த அடுத்த நாள் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, அங்கே செருப்பு அணிந்து சென்றதால் அடுத்து ஒரு சர்ச்சை வெடித்தது. இப்படி தொடர்ந்து பல்வேறு பிரச்சனையில் சிக்கி வருகின்றனர் நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் முதலில் திருப்பதி கோவிலில் தான் நடைபெற இருந்தது. நயன்தார கேரளாவை சேர்ந்த ஒரு கிறிஸ்துவர் குடும்பத்தை சேர்ந்தவர், இவர் நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த போது. பிரபு தேவாவுக்காக கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாற்றி கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தேவா உடன் நடக்க இருந்த திருமணம் தடை பெற்றது.

பிரபு தேவா உடனான காதல் முறிவுக்கு பின்பு விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, தொடர்ந்து அவருடன் ஒன்றாக இந்தியா முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களுக்கு சென்று வந்தார். குறிப்பாக அடிக்கடி இவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்று வந்தவர்கள், இவர்களின் திருமணம் திருப்பதி கோவிலில் தான் நடக்க வேண்டும் என்று காதலிக்கு போதே இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காற்று வாக்கில் இரண்டு காதல் படம் வெளியான பின்பு, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கோவில் நிர்வாகத்தை அணுகியுள்ளனர், அப்போது இருவரின் அடையாள சான்றிதழ்கள் அங்கே சமர்பிக்கப்பட்டுள்ளது, நயன்தாரா கிருஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்த கோவில் நிர்வாகம் மாற்று மதத்தினர் திருமணம் செய்ய இங்கே அனுமதியில்லை என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நயன்தாரா தான் இந்து மதத்துக்கு தன்னை மாற்றி கொண்டேன் என தெரிவித்தும், கோவில் நிர்வாகம் ஏற்று கொள்ளவில்லை. ஆனால் திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டும் என்பது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் ஆசை என்பதால் தனக்கு தெரிந்த சில முக்கிய புள்ளிகள் மூலம் கோவில் நிர்வாகத்துக்கு சிபாரிசு செய்ய வைத்துள்ளார். ஆனால் கோவில் நிர்வாகம் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர்.

இருந்தும் நயன்தாரா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கோவில் நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க, டென்ஷனான கோவில் நிர்வாகம் நயன்தாராவிடம் இங்கே கலப்பு திருமணத்துக்கு அனுமதியில்லை. தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யவேண்டாம், இதுக்கு மேல் உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது என கோபத்துடன், இனிமேல் நீங்க இங்க திருமணம் செய்ய வேண்டும் என்று எந்த பக்கமே வந்து விட கூடாது என்கிற தோரணையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருப்பதியில் இருந்து விரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் மோதல்…. திருமணம் முடிந்த மூன்றே நாளில் வெடித்த பிரச்சனை என்ன தெரியுமா.?