மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க நயன்தாரா அந்தர் பல்டி அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் மிக முக்கிய பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடத்துவதாக திட்டமிட்டிருந்த நிலையில்,
இவர்கள் திருமண நிகழ்ச்சியையும் வியாபாரம் பார்த்து சம்பாதித்து விடலாம் என்கின்ற நோக்கில், திருப்பதியில் திருமணம் நடத்தினால் முக்கிய பிரபலங்கள் வர முடியாது என்பதாலும், மேலும் திருமண நிகழ்ச்சியை படப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், இவர்கள் திருமணத்தை சென்னை மகாபலிபுரத்தில் நடத்த திட்டமிட்டு, இந்த நிகழ்வை பிரபல ஓடிடி நிறுவனமான நெட் பிலிக்ஸ் நிறுவனத்திடம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு விலை பேசி விற்பனை செய்தனர் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.
கடும் கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையில் நடந்தது நிலையில், இந்த நிகழ்வுக்கு முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, தனுஷ், நடிகைகள் ஹன்சிகா, திரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் பெரும்பாலானோர் வராத காரணத்தினால், நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனது.
இதனால் இந்த நிகழ்ச்சியை சுமார் 25 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கிய நெட்ஃபிக்ஸ் நிறுவனம் அதிர்ச்சிக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போல் முக்கிய பிரபலங்கள் வராததால் மிகக் குறைந்த விலைக்கு netflix நிறுவனம் இந்த நிகழ்வை ஒளிபரப்ப கேட்டது. ஆனால் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் பேசிய விலையில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தனர் அப்படியானால் வேறு ஒரு ஓடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்த நெட்பிலிக்ஸ் நிறுவனம்.
மேலும், நாங்கள் உங்கள் திருமணத்திற்கு செலவு செய்த பணம் மற்றும் உங்களுக்கு கொடுத்த முன் பணத்தை திரும்ப தாருங்கள் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கேட்டுள்ளது இதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் மருத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக நெட்பிக்ஸ் நிறுவனம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க களத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது .
அதாவது நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்ய தீவிரமாக இறங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டால் தங்களின் மொத்த இமேஜும் காலியாகி விடும் என்ற அச்சத்தில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் netflix நிறுவனத்திடம் நீங்கள் கொடுத்ததை கொடுங்கள் என அந்தர் பல்ட்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மிக குறைந்த விலைக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்தை விலைக்கு வாங்கியுள்ள நெட்லிக்ஸ் நிறுவனம், விரைவில் அதை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறது. மேலும் தற்பொழுது நெட்பிலிக்ஸ் நிறுவனம் மற்றும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இடையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், திருமணம் நிகழ்ச்சி ஓளிபரப்பு பற்றிய ப்ரோமோஷனை தொடங்கியுள்ளனர், இருந்தும் இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதை காண முடிகிறது.