விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் கடந்த ஏழு வருடத்துக்கு மேல் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9ம் தேதி இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. பிரபு தேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்பு சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மிக பெரிய வரவேற்பு இருந்த நிலையில் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கிய பின்பு நயன்தாராவுக்கு எல்லாமும் ஆனார் விக்னேஷ் சிவன்.
இதன் பின்பு இருவரும் இணைந்து பணம் சம்பாரிப்பதில் மிக தெளிவாக இருந்தனர், அந்த வகையில் ஒவ்வொரு படத்துக்கும் நயன்தாரா சம்பளம் கிடுகிடுவென உயர பின்னனியில் இருந்து வேலை செய்த்தவர் விக்னேஷ் சிவன், மேலும் சம்பாரித்த பணத்தை துபாயில் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளார் நயன்தாரா. இப்படி பல வகையில் பணம் சம்பாரிப்பதில் குறியாக இருந்து வருகின்றவர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி.
அந்த வகையில் தங்களுடைய திருமணத்தையும் வியாபாரம் செய்து பெரும் தொகையை சம்பாரித்து விட வேண்டும் என திட்டமிட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, பிரபல OTT நிறுவனங்களிடம் திருமணம் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்வதற்கு விலை பேசியுள்ளனர், ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு கேட்ட OTT நிறுவனங்களிடம், அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், சூர்யா, கமல், ஷாருக்கான், மம்மூட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களும்.
திரிஷா, ஹன்ஷிகா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளும் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்கின்றனர், மேலும் தமிழ் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி டாப் நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளும் எங்கள் திருமணம் ஒரு பேன் இந்தியா படம் போன்றது, தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நீங்கள் எங்கள் திருமணத்தை ஒளிபரப்பு செய்யலாம் என ஆசை காட்டிய நயன்தாரா முதலில் 40 கோடி வரை விலை பேசியுள்ளார்.
ஆனால் அந்த பிரபல நிறுவனம் 40 கோடியெல்லாம் முடியாது என இதில் 25 கோடிக்கு பேரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு சிறிய தொகை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நயன்தாரா படப்பிடிப்பில் எப்படி அனைத்தும் தயாரிப்பார்கள் செலவு செய்வார்களோ அதே போன்று திருமணம் செலவு அனைத்தையும் அந்த பிரபல OTT நிறுவனத்தை ஏற்று கொள்ள வைத்துள்ளார் நயன்தாரா.
இதனை தொடர்ந்து பந்தல் அமைத்தது, சாப்பாடு செலவு, பாதுகாப்புக்கு பவுன்சர்கள், மேக்கப், உடை என அனைத்துமே OTT நிறுவனம் செலவு செய்ய, பத்து பைசா செலவு இல்லாமல் ஓசியில் திருமணம் செய்து கொண்டனர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி. ஆனால் திருமணம் முடிந்த அன்று மாலை தான் நாம் ஆசை காட்டி மோசம் செய்யப்பட்டுள்ளோம் என தலையில் கையை வைத்து உட்கந்துள்ளது அந்த பிரபல OTT நிறுவனம்.
நயன்தாரா திருமணத்திற்கு ரஜினியை தவிர வேறு எந்த ஒரு முக்கிய நச்சத்திரமும் வரவில்லை, இதனை தொடர்ந்து நயன்தாரா திருமணம் நிகழ்வை மிக குறைந்த விலைக்கு கேட்க அதெல்லாம் முடியாது என நயன்தாரா மறுக்க, கொடுத்த அட்வான்ஸ் தொகையையும், திருமணத்துக்கு செலவு செய்த பணத்தையும் திரும்பி தாருங்கள், எங்களுக்கு உங்கள் திருமண நிகழ்வு வேண்டாம் என அந்த பிராபல OTT நிறுவனம் கேட்டுள்ளது.
அதற்கு சட்டம் பேசி அதெல்லாம் தர முடியாது என வாங்கிய பணத்துக்கு தன்னுடைய திருமணத்துக்கு செலவு செய்த பணத்துக்கு நாமத்தை போட்ட நயன்தாரா, பேசிய பணத்துக்கு வீடியோவை வாங்கி கொள்ளுங்கள், பணத்தை எல்லாம் திருப்ப தரமுடியாது என நயன்தாரா ஏப்பம் விட, செலவு செய்த பணம் போனாலும் பரவாயில்லை பெரும் தொகைக்கு வாங்கி நஷ்டம் அடைய வேண்டாம் என விலகி கொண்டது அந்த நிறுவனம் என கூறப்படுகிறது.