நயன்தாராவுக்கு தேதி குறித்த விக்னேஷ் சிவன்… இதற்குள் குழந்தை வேண்டும்.. இல்லை என்றால் என்ன முடிவு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சென்னை மாமல்லபுரத்தில் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர், அடுத்தநாள் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து கொண்ட நயன்தாரா- விக்னேஷ் சிவன். தற்பொழுது இருவரும் ஹானிமூன் கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். ஹனிமூன் முடித்த பின்பு தற்பொழுது நயன்தாரா கைவசம் இருக்கும் நான்கு படங்களின் படப்பிடிப்பும் அடுத்த மூன்று மதத்துக்குள் நடித்து முடிக்க உள்ளார்.

இதன் பின்பு இனி புதிய படம் ஏதும் நயன்தாரா ஒப்பந்தம் செய்யவில்லை. இந்நிலையில் 37 வயதாகும் நயன்தாரா குழந்தை பெற்று கொள்வதில் பல்வேறு பிரச்சனை உள்ளது என நாளுக்கு நாள் தகவல் வெளியாகி கொண்டே இருக்கிறது. மேலும் நயன்தாரா காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நடிப்பதற்கு முன்பு உடலில் உள்ள கொழுப்பை அக்காற்றுவதர்க்கு செயற்கை முறையில் சிகிச்சை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் தேவைக்கு அதிகமான கொழுப்புகள் நயந்தாரா உடலில் இருந்து அகற்றப்பட்டு, வத்தலும் தொத்தலுமாக முதிர்கன்னி போன்று காட்சியாகிறார், மேலும் இந்த சிகிச்சை மேற்கொண்டதால் நயந்தாராவுக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல் ரீதியான பாதிப்பை சரி செய்ய, மேலும் பழைய தோற்றத்துக்கு நயன்தார மீண்டும் கொண்டு வருவதற்கு கேரளாவில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் ஆறு மாதம் சிகிச்சைக்கு பின்பு தான் நயன்தாரா குழந்தை பெற்று எடுக்கும் முயற்சியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 37 வயதாகும் நயன்தாரா தற்பொழுது கைவசம் இருக்கும் படத்தை முடித்துவிட்டு, அதன் பின்பு ஆயுர்வேத சிகிச்சையை முடித்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப அடுத்து ஒரு வருடம் ஆகும், அப்படி இருக்கையில் 39 வயதை நெருங்கும் நயன்தாரா குழந்தை பெற்று எடுப்பதில் பல சிக்கல் இருப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தேதி ஓன்று குறித்துள்ளார், அதில் நயன்தாராவுக்கு 40 வயது ஆகும் வரை காத்திருப்போம், அதற்குள் குழந்தை பிறக்கவில்லை என்றால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளலாம் என்றும், குழந்தையை விட நயன்தாராவின் ஆரோக்கியம் தான் முக்கியம் என விக்னேஷ் சிவன் தெரிவிக்க, அந்த டீலிங் க்கு ஓகே என சம்மதம் தெரிவித்துள்ளார் நயன்தாரா என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்… அடம் பிடிக்கும் ரஜினிகாந்த் … டென்ஷனில் தயாரிப்பு நிறுவனம் என்ன செய்தது தெரியுமா.?