தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக திகழ்ந்த நமீதா, கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நமீதா . திருமணத்துக்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தனனுடைய இரட்டை குழந்தை கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார் நமீதா.
இந்நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னையில் கனமழை காரணமாக சென்னை வெள்ளத்தால் தத்தளிக்கிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மீட்டு வருகிறார்கள். மேலும் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு நாளில் அடித்த பேய் மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி உடைந்து பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இந்த குடியிறுப்பில் தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருடன் வசித்து வந்த நடிகை நமீதா வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நமீதா குடியிருந்த பகுதியில் அனைவரும் அப்பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் மீட்டு வெளியேற்றியுள்ளனர். ஆனால் நமிதா அவருடைய கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறாமல் இருந்துள்ளார். இதற்கு காரணம் அவர் வீட்டில் செல்ல பிராணியாக வளர்த்த நாயை அப்படியே விட்டுவிட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே நமீதா இருந்துள்ளார்.
அதாவது ஹோட்டல்களில் நாய் அனுமதி இல்லை என்பதால், நாயை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் மனமில்லாமல், ஒருவேளை நாயுடன் வெளியேறினால் ஹோட்டல்களில் நாய்களுக்கு அனுமதியில்லை, அப்படியானால் எங்கே நாயை தங்க வைப்பது என்கிற குழப்பத்தில், வெள்ளம் சூழ்ந்த வீட்டிலே தன்னுடைய இரட்டை குழந்தைகள், கணவர் மற்றும் செல்ல பிராணிகளுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் திமுக வட்ட செயலாளர் ஆனந்த் பால், உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை நமீதா இருக்கும் பகுதியில் வழங்கி வந்துள்ளார்கள், அப்போது நடிகை நமீதாவிற்கு நிவாரண பொருட்களை வழங்கினார். வேறு ஏதாவது உதவிகள் வேண்டுமா என நமீதாவிடம் கேட்டதற்கு இந்த இடத்தை விட்டு வெளியேறினால் போதும் என கூறியுள்ளார்.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் படகில் வந்து நமீதா, அவருடைய கணவர், இரட்டை குழந்தைகள், நாய்க் குட்டிகளை மீட்டனர். நமீதாவுடன் சேர்த்து மேலும் 200 நபர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடிகை நமீதா கூறுகையில் கடந்த 3 நாட்களாக அக்கம் பக்கத்தினர் உதவி செய்தனர். குழந்தைகள் இருப்பதால் எங்களால் அதே வீட்டில் வசிக்க முடியாத நிலை உள்ளது.
எங்களை தவிர இங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர். நாய்க் குட்டிகள் இருப்பதால் இங்கிருந்து வெளியேற முடியாத நிலை இருந்தது. ஹோட்டல்களில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும். எங்கள் உறவினரின் வீட்டிற்கு செல்கிறோம். எங்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர், திமுக நிர்வாகி ஆனந்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.