2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகர் என்பவரை தன்னுடைய 33வது வயதில் திருமணம் செய்து கொண்டார் நடிகை , இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வித்யாசாகர் பெங்களூரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். நடிகை மீனா குடும்பத்துடன் பெங்களுரில் வசித்து வந்துள்ளார். அந்த வகையில் பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் கணவருடன் பெங்களூரில் தான் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் கொரோனா தொன்றின் போது மீனா மற்றும் அவரது கணவர் என குடும்பத்தினர் அனைவரும் கொரானா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.
ஆனால் கொரோனா தொன்றில் பாதிக்கப்பட்ட மீனா கணவர் வித்யாசாகர் மட்டும் அதன் பின்பு அடிக்கடி நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம், பெங்களூரில் உள்ள அவரது வீட்டை சுற்றி புறாக்கள் அதிகமாக இருப்பதாகவும், புறாக்கள் எச்சம் அவர் வீட்டை சுற்றி அதிகம் காற்றுடன் கலந்துள்ளதால், அந்த புறாக்கள் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த வித்யாசாகர்க்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.
புறாக்களின் எச்சம் கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் சில நபர்களுக்கு இது போன்று நுரையீரல் பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நுரையீரலும் முழவதும் பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று நுரையீரலுக்காக முளை சாவு அடைத்தவர்களின் நுரையீரல் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்பு அமையவில்லை, இருந்தும் மருத்துவர்கள் போராடியும் மீனா கணவரை காப்பாற்ற முடியாமல் போனது,
இந்நிலையில் புறா எச்சத்தை அதிகம் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படும் என்பதற்கு மற்றும் இரு சம்பவம் தற்போது நிகழ்துள்ளது. திம்பால் ஷா என்கிற ஜராத்தை சேர்ந்த 42 வயது பெண் சென்னையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.சென்னையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு நோயால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மூலம் இந்த நோய் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று குஜராத்தை சேர்ந்த குமணி என்கிற பெண் நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு என்ற நோயால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள உறுப்பு மாற்று சிகிச்சையில் உலகளவில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.குஜராத்தை சேர்ந்த அந்த பெண்ணுக்கு புறா வளர்ப்பினால் இந்த நோய் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர் வீட்டில் இரண்டு புறா பண்ணைகளை வளர்த்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவருக்கு நார்த்திசு நுரையீரல் நோய் பரவியது உறுதி செய்யப்பட்டது. புறாக்களின் கழிவுகள், எச்சங்களினால் இந்த அழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் உறுப்பிடை நார்த்திசு பாதிப்பு ஏற்பட்டு நுரையீரல் செயல் இழந்து உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில் செல்லமாக வளர்க்கும் புறாக்களை மனிதர்களின் உயிரை காவு வாங்கும் சூழல் உருவகியுள்ளது. அந்த வகையில் வீட்டில் புறா வளர்கின்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது சமீபத்தில் புறா எச்சத்தை சுவாசித்து நுரையீரல் பாதிப்படைந்து மரணம் அடையும் சம்பவங்கள்.