மஞ்சு வாரியார் கணவரை ஆட்டைய போட்ட தோழி… மஞ்சு வாரியார் சோகமான வாழ்க்கை..

0
Follow on Google News

இன்று தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய மிரட்டலான நடிப்பின் மூலம் ரியல் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வரும் மஞ்சு வாரியர் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சோகம் பலருக்கு தெரிந்திருக்காது, திருமணமான கணவர் தனக்கு செய்த துரோகம், தன் கூடவே பழகிய தோழி தன் முதுகில் குத்திய துரோகம், இப்படி பல சோதனைகளை எப்படி கடந்து வந்தார் மஞ்சு வாரியர் என்பதை தெரிந்து கொண்டாலே,

நம்ம எல்லாம் என்ன பெரிய கஷ்டத்தை அடைந்து விட்டோம் என்று மஞ்சுவாரியரின் வாழ்க்கையே, இன்று சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பலருக்கு ஒரு பாடமாக இருக்கும். மஞ்சுவாரியார் கேரள சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தபோது கேரள நடிகர் திலீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை.

சினிமாவை விட்டு விலகி தன்னுடைய இல்லற வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வந்த மஞ்சு வாரியர் சினிமா தோழி காவியா மாதவன், எப்படி மஞ்சுவாரியாருடன் நெருங்கி பழகினாரோ.? அதே போன்று திலீப் உடன் நெருங்கி பழகினார். ஒரு கட்டத்தில் திலீபுக்கும் காவ்யா மாதவனுக்கும் இடையில் இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்த கல்ல காதல் விவராயம் விவகாரம் நடிகை பாவனா மூலம் மஞ்சுவாரியருக்கு தெரிய வருகிறது.

தன்னுடன் பழகிய தோழியே தனக்கு துரோகம் செய்துவிட்டாரே.! தன்னுடைய கணவனுக்காக சினிமா வேண்டாம் என்று தன்னுடைய கணவருக்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டிருக்கிற தன்னை தன்னுடைய கணவர் ஏமாற்றி விட்டாரே என்கின்ற மிகப்பெரிய விரக்தியின் உச்சத்திற்கே சென்றார் மஞ்சுவாரியர். குடும்பத்தில் பிரச்சனை பெருசாகிறது. மஞ்சுவாரியர்க்கும் திலீப்புக்கும் விவாகரத்து நடைபெறுகிறது.

மஞ்சுவாரியருக்கும் திலிப்புக்கும் பிறந்த பெண் குழந்தை நான் அப்பாவிடமே செல்கிறேன் என்று மஞ்சு வாரியருடன் வருவதற்கு மறுத்து விடுகிறார். திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இப்படி மிகப்பெரிய சோகத்தில் ஆழ்ந்திருந்த மஞ்சு வாரியர், பிடல் காஸ்ட்ரோவின் புத்தகத்தை படித்து இனிமேல்தான் நம்மளுடைய புதிய வாழ்க்கை தொடங்கப் போகிறது.

மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்போம், சினிமாவில் வெற்றி அடைவோம் என்று முடிவு செய்த மஞ்சு வாரியர், மீண்டும் வீணை வாசிக்க ஆரம்பிக்கிறார். நடனமாடுகிறார், தன்னுடைய உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆகிறார். தன்னுடைய நடிப்பின் திறமையால் மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார்.

அதனை தொடர்ந்து அசுரன் என்கின்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார், தன்னுடைய திறமையான நடிப்பினால் தமிழில் நடிப்பின் அசுரி என்று பாராட்டப்பட்டார் மஞ்சு வாரியார், அதனைத் தொடர்ந்து அஜித்துடன் துணிவு தற்பொழுது ரஜினிகாந்த் உடன் வேட்டையன் சமீபத்தில் வெளியான விடுதலை போன்ற அவருடைய நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து மிகப்பெரிய வெற்றியையும் பெற்று வந்து கொண்டிருக்கிறார் மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியார் தன்னுடைய கவலைகளை மறந்து இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் என்று கேட்டபோது உள் மனதை சரி செய்தாலே மகிழ்ச்சி தானாக வந்துவிடும் என தெரிவித்தவர்,அது போன்று தன்னுடைய உள் மனதை மாற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் ரியல் லேடி சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் மஞ்சு வாரியார் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here