கடந்த சில வாரங்களாகவே சினிமா வட்டாரங்களில் நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரின் கிசுகிசு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த சக தோழனை கீர்த்தி சுரேஷ் சுமார் 13 வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவரைத்தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷ் காதலன் பிறந்த தினத்தில் நடிகர் விஜய் நேரடியாக சென்று வாழ்த்தியதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் கீர்த்திசுரேஷ்க்கு அப்படி ஒரு காதலன் கிடையவே கிடையாது என்றும், நடிகர் விஜய் – கீர்த்தி சுரேஷ் கிசு கிசுவை திசை திருப்புவதற்காகவே, கீர்த்தி சுரேஷ் 13 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறார், அவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார், அதிலும் கீர்த்தி சுரேஷ் காதலனை விஜய்யே நேரில் சென்று வாழ்த்தினார் என்பதெல்லாம், விஜய் தரப்பில் இருந்து கிளப்பி விட்ட ஒரு வதந்தி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ்- விஜய் இருவருக்குமான கிசுகிசுக்களை உறுதி செய்யும் வகையில் பல சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வந்திருந்தாலும், அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் மார்க்கெட் இழந்த நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக தமிழில் கடந்த சில வருடங்களாக சொல்லும்படி கீர்த்தி சுரேஷுக்கு படம் எதும் வரவில்லை.
இதனால் ஹீரோயின் சப்ஜெட் படமாக தேர்வு செய்து, தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து ஒரு ரவுண்டு வரவேண்டும் என்கிற திட்டத்துடன்.ரிவால்வர் ரீட்டா என்கிற படத்தில் கமிட்டாகி, படத்தின் பூஜை மட்டும் போடப்பட்டு இருந்த நிலையில், பொருளாதார பிரச்சனை காரணமாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிவால்வர் ரீட்டா படத்தை கைவிட முடிவு செய்து, படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுத்து ஜொலிக்க உதவி செய்யும் வகையில், கீர்த்தி சுரேஷுக்கு நேரடியாக உதவி செய்தால், ஏற்கனவே உள்ள கிசு கிசு மேலும் தீயாய் பற்றி எரியும் என சற்று தயக்கம் காட்டி வந்த விஜய், தன்னுடைய மேனேஜர் ஜெகதீசை தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க வைத்து, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்தை தயாரிப்பதற்கான பண உதவி செய்து வருகிறார் விஜய் என்கிறது சினிமா வட்டாரங்கள்.
மேலும் கீர்த்தி சுரேஷ் தற்பொழுது முழுக்க முழுக்க விஜய் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும், விஜய் கண் பார்வையிலே கீர்த்தி சுரேஷ் இருக்க வேண்டும் என்பதற்காக, விஜய் குடியிருக்கும் நீலாங்கரை வீட்டின் அருகிலே அவருடைய நண்பர் சஞ்சய் குடியிருக்கும் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷை குடி வைத்துள்ளார் விஜய் என்கிற தகவல் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் – விஜய் கிசு கிசு செய்திகளுக்கு மேலும் தீனி போட்டுள்ளது.
விஜய் நண்பர் வீட்டு மாடியில் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பதை கையும் களவுமாக பிடித்து சில ஊடகங்கள் ஒரு பக்கம் செய்தி வெளியிட்டு கொண்டிருக்கையில், மறுப்பக்கம் கடந்த சில மாதங்களாக விஜய் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து லண்டனில் சங்கீதா இருந்து வருவதாகவும், அதனால் தான் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூட சங்கீதா கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் – கீர்த்தி சுரேஷ் கிசு கிசு பிரச்சனையால் விஜய் குடும்பத்தில் ஏற்பட்ட பிரட்சனையில் மனைவி சங்கீதா லண்டனில் இருந்து வரும் இந்த நிலையில், தற்பொழுது விஜய் வீட்டின் அருகிலே, அவருடைய நண்பர் சஞ்சய் வீட்டின் மாடியில் கீர்த்தி சுரேஷ் குடியிருப்பது, மேலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரிவால்வர் ரீட்டா படத்திற்கு விஜய் பண உதவி செய்து வரும் செய்திகளால் ஏற்கனவே விஜய் அவரது மனைவிக்கு இடையில் இருந்த பிரச்சனை மேலும் புகைச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.