அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் திரிஷா குறித்து பேசிய பரபரப்பு நிலவி வரும் நிலையில், தற்பொழுது திரிஷா குறித்து இது வரை யாருக்கும் தெரிந்திராத பல அதிர்ச்சியூட்டும் தகவல் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவில் நடந்த முதல்வர் நாற்காலி போட்டியில், சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர் அணிக்கு தாவி விட கூடாது என்பதற்காக, அணைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் கூவந்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அங்கிருந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இத்தனை கோடி என பெரும் பணம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது, இப்படி பணம் கைமாறி, சசிகலா காலில் தவழ்ந்து சென்று விழுந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானது என்பது எல்லாம் தெரிந்த கதை தான், ஆனால் தற்பொழுது கூவத்தூரில் இருந்த அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் எனக்கு திரிஷா தான் வேண்டும் என அடம் பிடித்ததாகவும்,
உடனே கருணாஸ் மூலம் நடிகை திரிஷா 25 லட்சம் பணம் கொடுத்து கூவந்தூர் அழைத்து வரப்பட்டார் என அதிமுக முன்னாள் நிர்வாகி பேசிய பேச்சு, மக்கள் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் இந்த சம்பவம் உண்மையா.? பொய்யா.? என்று கூட ஆராய்ச்சி செய்து பார்க்காமல் பலரும் இந்து உண்மை என்பது போன்று, அந்த அதிமுக முன்னாள் நிர்வாகி திரிஷா குறித்து பேசிய பேச்சை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் திரிஷா குறித்து மற்றொரு விஷயம் வெளியாகி மேலும் பரபரபரப்புக்கு உள்ளாகி உள்ளது, அதாவது திரிஷா கூவந்தூர் விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திரிஷாவுக்கு அரசியல் பிரமுகர்களுக்குமான பழக்கம் எப்படி இருக்கும், அரசியல் பிரமுகர்களை திரிஷா எப்படி பார்ப்பார் என்கிற பல கேள்விகளுக்கு விடை தேடி திரிஷா பற்றிய தகவலை அறிந்து கொள்ள பிரபல சினிமா பத்திரிகையாளர் திரிஷா நடித்த ஒரு படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
அப்போது திரிஷா நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிக்குக்கான ஏற்பாடுகளுக்கான உதவியை அங்கிருக்கும் முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகருமான கவுன்சிலர் ஒருவர் தயார் செய்து, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் உதவி செய்து வந்துள்ளார். பொதுவாகவே நடிகை திரிஷா படப்பிடிப்பு தளத்திற்கு வரும் பொதுமக்கள் ஆகியோர் புகைப்படம் எடுக்க விருப்பப்பட்டால், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்.
புகைப்படம் எடுத்து கொளவதற்காவே சில நிமிடம் செலவு செய்வாராம் திரிஷா. அந்த வகையில் இந்த படப்பிடிப்புக்கு அதிக உதவி செய்த அந்த கவுன்சிலர், இயக்குனரை சந்தித்து நான் திரிஷாவுடன் ஒரு புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என தன்னுடைய ஆசையை அந்த இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். உடனே நாளை காலை வாங்க புகைப்படம் தானே எடுத்துக்கலாம் என அந்த இயக்குனர் தெரிவித்துள்ளார்.
உடனே அடுத்த நாள் ஒரு பத்து நபர்களுடன் பெரிய மாலையுடன் திரிஷாவுடன் புகைப்படம் எடுக்க திரிஷா இருக்கும் இடத்திற்க்கு வந்துள்ளார் அந்த கவுன்சிலர், ஆனால் இவர்களை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லையாம், ஆனால் அங்கே வரும் சாதாரண பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். திரிஷா உடனே புகைப்படம் எடுக்க காலை வந்து மாலை வரை காத்திருந்த கவுன்சிலருக்காக படத்தின் இயக்குனர் நடிகை திர்ஷாவிடம் நேரடியாக கேட்டுள்ளார்.
அதற்கு திரிஷா, நான் அரசியல் பிரமுகர்களுடம் புகைபடம் எடுக்க மாட்டேன் என்கிற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன், புகைப்படம் எடுத்து கொண்டால்,அது எனக்கு எதிராக்காலத்தில் தேவையில்லாத பிரச்ச்னை, அதனால் அவர்களிடம் பேசி புரியவைத்து அனுப்பிவிடுங்க என தெறிவித்து விட்டாராம், அந்த அளவுக்கு அரசியல் பிரமுகருடன் புகைப்படம் எடுக்க கூட விரும்பாத திரிஷாவை கூவந்தூர் விவகாரத்தில் ஆதாரமில்லாமல் அதிமுக முன்னாள் நிர்வாகி பேசியுள்ளது, குற்றமே செய்யாத திரிஷா மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என திரிஷா ரசிகர்கள் வேதனையை பகிர்ந்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.