தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் சார்ந்த தொழில் செய்யாமல் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். தந்தை சங்கர் ஆரம்பத்தில் அதிதி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மகளின் ஆசைக்காக ஒருவன் படத்தில் நடிக்க பச்சைக்கொடி கட்டியுள்ளதாக கூறப்பட்டது.
அதிதி சங்கர் நடித்த முதல் படம் விருமன், இந்த படத்தில் இடம்பெற்ற மதுரை வீரன் என்கிற பாடலை அதிதி சங்கர் பாடியிருந்தார், இந்த பாடல் ஹிட் அடிக்க அடுத்தடுத்து அதிதி சங்கர் செய்து வந்த அலப்பறையும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிதி சங்கர் மீது எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் அமைத்தது. விருமன் படம் வெளியான பின்பு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்ட அதிதி அந்த படத்தில் அவர் பாடிய பாடலை அனைத்து மேடைகளிலும் பாடி ரசிகர்களுக்கே இதை பார்த்து பார்த்து போரடித்து அம்மா தயவு செய்து அந்த பாடலை படுவதை நிறுத்து என்று ட்ரோல் செய்து வந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தொடர்ந்து தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அதிதி சங்கர் அவர் நடிக்கும் படத்தில் செய்து வரும் அட்ராசிட்டி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.மாவீரன் படத்தில் இடம்பெற்ற வண்ணாரப்பேட்டையில என்கிற பாடலை அதிதி சங்கர் பாடியிருப்பார், இந்த பாடலை முதலில் கர்ணன், குட் நைட்போன்ற படங்களில் பாடிய பாடகி மீனாட்சி இளையராஜா குரலில் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குட் நைட் படத்தி ஷான் ரோலன் இசையில் மீனாட்சி பாடியதைக் கேட்ட மாவீரன் படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் படத்தில் வண்ணாரப்பேட்டையில பாடலை பாட அழைத்ததாக தெரிவித்த பாடகி மீனாட்சி, பின்பு அந்த பாடல் பாடிய பின்னர் படக்குழுவும் இசையமைப்பாளர் பரத் சங்கரும் மீனாட்சியை பாராட்டவும் செய்துள்ளார்கள், ஆனால் ஏனோ படக்குழு தான் பாடியதை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் குரலில் பாடலை ரிலீஸ் செய்ததாக வேதனையுடன் தெரிவித்த பாடகி மீனாட்சி.
இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், சில நேரங்களில் தனக்கு நன்றாக பாடவரவில்லை என்றும், நன்றாக பாடி இருந்தால் படத்தில் எனது குரலில் பாடல் வெளியாகியிருக்கும் என நினைத்து அழுவதாகவும், சில நேரங்களில் இதைவிட நல்ல வாய்ப்பு வரும் எனக்கூறி தன்னை தேற்றிக் கொள்வேன் என்றும் பாடகி மீனாட்சி இளையராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஆனல் அதிதி சங்கர் இது போன்று செய்வது இது முதல் முறையல்ல. அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இடம்பெற்ற மதுரைவீரன் பாடலை முதலில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியது பிரபல நாட்டுப்புற பாடகியும், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி. ராஜலட்சுமி குரலில் மதுரை வீரன் பாடல் ரெகார்டிங் முடிந்த பின்பு. இதே பாடலை இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் குரலில் மீண்டும் ரெகார்ட் செய்யப்பட்டு, பின்பு ராஜலக்ஷ்மி குரல் நீக்கப்பட்டு, அதிதி சங்கர் குரலில் மதுரை வீரன் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கர் மகள் என்கிற ஒரே காரணத்திற்காக ஒவ்வொரு படத்தின் போது அதிதி சங்கர் விருப்பத்திற்காக அந்த படத்தின் இசை அமைப்பாளரும், இயக்குனர்களும் அதிதி சங்கரை மகிழ்ச்சி படுத்த அவர்கள் படத்தில் பாடல் பட வாய்ப்பு கொடுக்கட்டும், ஆனால். ராஜலட்சுமியை பாட வைத்து பின்பு அவர் குரலை நீக்கியது, ஒரு நாட்டுப்புற பாடகியை அவமானப்படுத்தும் செயல்.
அதிதி சங்கரை வைத்து பாட வைக்க வேண்டும் என்றால், முன்பே மற்ற பாடகிகளை தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால் ராஜலட்சுமி, மற்றும் மீனாட்சி இளையராஜா போன்ற பாடகிகளை அழைத்து அவர்களின் குரலில் ரெகார்டிங் செய்து, பின்பு நீக்கியுள்ளது அவர்களை அவமானப்படுத்தும் செயல், இதனால் பாதிக்கப்பட்ட பாடகிகள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.