தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. ஆரம்ப காலத்தில் இசை பாடல் போலவே நடிப்பிலும் ஆர்வம் கொண்ட இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். கண்ட நாள் முதல் பட கிளைமாக்ஸில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் கதாநாயகிக்கு டப்பிங் பேசினார். அதன்பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகையாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, பூஜை, ஆம்பள, வலியவன் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கேமியோ கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் ஆண்ட்ரியா. நடிகையாக கிட்டத்தட்ட 32 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் இவர் படங்களில் நடித்து வருகிறார். நடிப்பை போலவே பாடலிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், இதுவரை எக்கச்சக்கமான பாடல்களை பாடி இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் இவரது குரல்கள் ஒலித்திருக்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழில் சில பாடல்களில் ஆங்கில வரிகள் இடம்பெற்றிருக்கும். அப்படியான பாடல்களுக்கு பெரும்பாலான இசையமைப்பாளர்கள் அணுகுவது இவரைத்தான். இவரே அந்த ஆங்கில வரிகளை எழுதி பாடி கொடுப்பார். அப்படி ஆண்ட்ரியா பாடி மாபெரும் ஹிட் கொடுத்த பாடல் தான் மதராசபட்டினம் படத்தில் வரும் பூக்கள் பூக்கும் தருணம் பாடலாகும். ஆங்கில வரி எழுதி அதனை பாடுவதில் ஆண்ட்ரியா தனி சிறப்பு வாய்ந்தவர். மேலும்,தரமணி படத்தில் சில பாடல்களுக்கு இவரே இசையமைத்து பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியாவின் குரல் ரசிகர்கள் மத்தியில் அதிக ஈர்ப்பை பெற்றிருக்கிறது. இவரது குரலில் தனித்துவமான வைப் இருப்பதால் இவர் கொடுக்கும் டப்பிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. நடிகை, பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்ட ஆண்ட்ரியா, இதுவரை பல விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் சில விருதுகளையும் வென்றிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வடசென்னை படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஆண்ட்ரியா வென்றார்.
தற்போது தெலுங்கில் இயக்குனர் சைலேஷ் இயக்கத்தில் சைந்தவ் படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆகிறது. அது மட்டுமல்லாமல் தமிழில் பிசாசு 2, கா, மளிகை, நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். பாபி ஆண்டனியின் ஒரு படத்திலும் தினேஷ் செல்வராஜின் ஒரு படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கிட்டத்தட்ட ஏழு படங்களை ரிலீசுக்கு வைத்துள்ளார் ஆண்ட்ரியா.
இந்நிலையில் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் வட சென்னை படத்தில் இயக்குநர் அமீர் உங்களுடன் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க கஷ்டப்பட்டாராம் என்று கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது ஆண்ட்ரியா, அமீர் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் வெட்கப்படுவார். மேலும் அவர் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு சற்று தடுமாறியது உண்மை தான் என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
மேலும் இப்போ என்னை எடுத்துக்கோங்க.. நான் ஒரு பெண் என்றாலும் அது போன்ற லவ் சீன்களில் நடிக்க வெக்கப்பட்டதில்லை. எனக்கு பல படங்களில் இது போன்ற காட்சிகளில் நடித்த அதிக அளவு எக்ஸ்பிரியன்ஸ் இருந்ததால் நான் எளிதில் நடித்து விட்டேன். ஆனால் அவரது நிலைமை அப்படி இல்லை என்று கலகலப்பாக பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவானது இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது