இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ள படம் விருமன். இந்த படத்தில் அவருடைய நடிப்பு, நடனம், பாடல் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்று வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிதி சங்கருக்கு எதிரான கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. தன்னுடைய தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி அடுத்தவர் வாய்ப்பை தட்டி பறித்து விட்டார் அதிதி சங்கர் என்கின்ற கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.
ஆனால் இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் வாரிசுகளாக களம் இறங்கிய நடிகர் சூர்யா, கார்த்திக், விஜய், சிம்பு, தனுஷ் இன்னும், எத்தனையோ நடிகர்கள் வாரிசுகளால் தங்களின் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனாலும் அடுத்தடுத்து அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் சொந்த முயற்சி தான் உதவியது. இதில் எத்தனையோ வாரிசு நடிகர்களான சிபிராஜ் சாந்தனு இன்னும் பலர்,தங்களுடைய தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் இல்லாததால் சினிமாவில் காணாமல் போய்விட்டார்கள்.
இதில் எத்தனையோ நடிகர் நடிகைகளை உருவாக்கிய இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் ஒருவரை சினிமாவில் அழித்துவிட்டு அவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்து தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கான வாய்ப்பு தமிழ் சினிமாவில் இருக்கிறது என்றால் அது இல்லை என்று தான் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் நெப்போட்டிசம் என்பது தலை தூக்கி உள்ளது. அங்கே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை தவிர வேறு யாரும் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் யாருக்கும் வாய்ப்பில்லையா.? என்கின்ற மனக்குமுறல் நீண்ட நாட்களாக ரசிகர்களுக்கு இருந்து வந்தது.
குறிப்பாக தமிழ் தேசியம் பேசக்கூடிய இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான் போன்றவர்கள் கூட தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பளிக்காமல் வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்களுக்கு தான் வாய்ப்பு அளித்து வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழச்சி அதிதி சங்கர் சினிமாவில் நடிக்க வருவதர்க்கு முன்பே நன்கு நடனம், நடிப்பு, பாடல் என அனைத்தும் கற்று நடிக்க வந்திருப்பதை ஒவ்வொரு தமிழர்களும் வரவேற்க வேண்டிய செயல்.
அவர் முதல் படத்தில் வாங்கிய 25 லட்சம் கண்ணை உறுத்துகிறது என்றால், கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி இங்கு உள்ள தமிழர்கள் யாரும் விமர்சனமோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு தமிழச்சிக்கு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக கடுமையான விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்.
அதிதி சங்கர் தன்னுடைய தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி பிறர் வாய்ப்பை தட்டி பறிப்பது போன்ற ஒரு விமர்சனத்தை முன் வைப்பது ஏற்புடையது அல்ல என்கிறது தமிழ் சினிமா. அதே நேரத்தில் தன்னுடைய தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி முதல் படத்தில் அதிதி வாய்ப்பை பெற்றிருந்தாலும், அடுத்தடுத்து அவரின் திறமையின் அடிப்படையில் தான் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.