இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு, நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையை மாநாடு முன், மாநாடு பின் என்று பிரித்து பார்க்கலாம். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் காணாமல் இருந்த சிம்புவுக்கு, மீண்டும் சினிமாவில் மறு வாழ்வு கொடுத்த படம் மாநாடு. மேலும் கடந்த இரண்டு வருடத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்கள் பல தோல்வியடைந்து வரும் நிலையில் மிக பெரிய வெற்றியை பெற்ற படம் மாநாடு.
மாநாடு படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு பல தடைகளை கடந்து திரைக்கு வந்த படம், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை பெற்று தந்த படம் மாநாடு. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் சிம்பு ஆகியோரை அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளது மாநாடு படம். இப்படி அனைவர்க்கும் மாநாடு படம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், சூர்யா – கார்த்திக் சகோதரர்கள் இருவரும் தலையில் கையை வைத்து தேம்பி தேம்பி கதறி ஆளும் சூழலை ஏற்படுத்திவிட்டார் வெங்கட் பிரபு.
நடிகர் சூர்யா கடந்த 8 வருடங்களாக திரையரங்குகளில் வெளியான அவருடைய ஒரு படங்கள் கூட வெற்றி பெறவில்லை, ஜெய்பீம் மற்றும் சூரரை போற்று படங்கள் கூட OTT யில் தான் வெளியானது திரையரங்குகளில் வெளியாக வில்லை. அதே போன்று சூர்யா தம்பி கார்த்திக் நடிப்பில் கடந்த சில வருடங்களில் வெளியான படங்களில் கைதி தவிர்த்து மற்ற படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை, இந்நிலையில் நடிகர் சூர்யாவை சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபு.
மாநாடு படம் கதையை தெரிவித்து இந்த படத்தில் நீங்க நடித்தால் நன்றாக இருக்கும் என அப்ரோச் செய்துள்ளார். ஆனால் சூர்யா மாநாடு கதையை ரிஜெக்ட் செய்துவிட்டு வேறு ஒரு கதை சொல்லுங்க என்று சொல்லியுள்ளார், ஆனால் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் கதையை மீண்டும் ஒரு முறை நான் சொல்கிறேன் நீங்க கேளுங்க, மிஸ் பண்ண வேண்டாம் என தெரிவித்துள்ளார், ஆனால் சூர்யா அதான் ஒரு தடவை கேட்டாச்சு, ப்ளீஸ் வேண்டாம் வேற கதை இருந்தா சொல்லுங்க என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
அப்போது மாஸ் என்கிற மாசிலாமணி படத்தின் கதையை வெங்கட் பிரபு தெரிவிக்க.. உடனே ஏன் சார், இந்த கதையை முதலில் சொல்லவில்லை, கதை அருமை என சூர்யா நடிக்க ஒப்பு கொண்டார், ஆனால் இந்த படம் வெளியாகி படு மோசமான தோல்வியை சந்தித்தது, இது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சூர்யா இருவருக்கும் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதே போன்று மாஸ் என்கிற மாசிலாமணி படம் எடுப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் கார்த்தியை சந்தித்து மாநாடு கதையை தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரும் மாநாடு கதையை புறக்கணித்துவிட்டு வேறு ஒரு கதை ரெடி பண்ணுங்க என சொன்னார், இதன் பின்பு பிரியாணி என்கிற தலைப்பில் புதிய கதையை தயார் செய்து அதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்தார். பிரியாணி படமும் படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் மாநாடு படம் வெளியாகி சக்கை போடு போட்டு பாராட்டை அள்ளி குவித்த நிலையில், அயோ… மிஸ் மண்ணிட்டோமே.. என்று தலையில் கை வைத்து சோகத்தில் சூர்யா -கார்த்திக் சகோதரர்கள், உள்ளதாக கூறப்படுகிறது.