மறைந்த விவேக் இந்தியன் 2 படத்தில் தொடர்ந்து நடிக்கிறார்.. எப்படி சாத்தியமானது தெரியுமா.?

0
Follow on Google News

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கி கொரானா தொற்று காரணமாக தடைபட்ட்டது. அதனை பின்பு படத்தில் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது.இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.

இந்தியன் 2 படத்தில் பெரும்பாலான காட்சிகள் நடிகர் விவேக் நடித்து முடித்துள்ள நிலையில், ஏற்கனவே அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு,அவருக்கு பதில் வேறு ஒரு நடிகரை வைத்து படமாக்க படுமா, அல்லது விவேக் இதுவரை நடித்த காட்சிகளை படத்தில் இடம்பெற செய்து பின்பு விவேக் மரணம் அடைவது போன்று ஒரு கட்சியை டூப் போட்டு நடிக்க வைத்து கதையில் சில மாற்றங்களை கொண்ட வருவார்களா என பல குழப்பங்கள் நீடித்தது.

ஆனால் அதர்க்கான வாய்ப்புகள் இல்லை என்றதும் கதை படி இந்தியன் 2 படத்தில் விவேக் நடிப்பார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இதனால் விவேக் நடித்துள்ள காட்சிகள் மாற்றப்படவோ அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாரையும் நடிக்க வைக்கவோ இல்லை என்பதையும் உறுதி படுத்தும் வகையில் தகவல் வெளியகியுள்ளது.விவேக் நடிக்கும் காட்சிகளில் VFX முறையில் அதிக செலவு செய்து விவேக் போன்று கிராபிக்ஸ் வடிவதத்தில் படமாக்க பட இருப்பதாக கூறப்டுகிறது.

மேலும் விவேக் குரலுக்கு டப்பிங் பேச மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் தேர்வும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கா பெரும் தொகை செலவு ஆகும் என்றும், இருந்தாலும் கதையில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து விவேக் நடிக்கும் காட்சிகள் வின்ஞான முறையில் எடுக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சங்கர்.