நடிகர் சங்க தலைவராக நடிகர் சரத்குமார் இருந்தபோது அவருக்கு எதிராக குரல் எழுப்பியவர் நடிகர் விஷால். இந்த சம்பவத்துக்கு பின்பு விஷால் பின்னால் சரத்குமாருக்கு எதிராக சினிமா துறையைச் சார்ந்த பலர் அணிவகுத்தனர். இதனால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை தோல்வி அடை செய்து விஷால் அணியினர் நடிகர் சங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் சரத்துக்குமார் மீது நடிகர் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்து அவரை சங்கத்தில் இருந்தே நீக்கியது விஷால் அணியினர்.
ஒரு பக்கம் சரத்குமாரை எதிர்த்து விஷால் செயல்பட்டு வந்தாலும், மறுபுறம் சரத்குமாரின் மகள் வரலட்சுமி காதலித்து வந்தார். அதே போன்று நடிகர் சங்கத் தேர்தலில் தனது தந்தைக்கு எதிராக விஷால் செயல்பட்டாலும் கூட, தன்னுடைய காதலில் வரலட்சுமி உறுதியாக இருந்து வந்தார். நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடித்த பின்பு அந்த புதிய கட்டிடத்தில் என்னுடைய திருமணம் நடைபெறும் என நடிகர் விஷால் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் விஷால் வரலட்சுமி இருவருடைய திருமணம் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்றும் பரவலாக பேசப்பட்டது. அதே நேரத்தில் தன்னுடைய வெற்றிக்கு பின்னால் வரலட்சுமி இருப்பதாக வெளிப்படையாகவே விஷால் பேசி வந்தார். ஏழு வருடங்கள் ஆக காதலித்து வந்த இந்த ஜோடி, இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாக கலந்து கொண்டவர். திருமணத்துக்கு முன்பே இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வரலட்சுமி மற்றும் விஷால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய காதலை முறித்துக் கொண்டனர். நீண்ட காலமாகவே சரத்குமார் மற்றும் விஷால் இருவருக்கும் இடையில் உள்ள பகை நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என குரல் எழுந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடித்தது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசினார் சரத்குமார்.
அப்போது, ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவாக சரத்குமார் பேசியதாவது.நான் சொன்னால் மக்கள் கேட்டுவிடுவார்களா? எனக்கு ஓட்டு போடுங்கள் என்கிறேன், போடுகிறார்களா? ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்கிறேன், ஆனால் வாங்குகிறார்களே. அப்படி இருக்கும்போது ரம்மி விளையாடக் கூடாது என்று நான் சொன்னால் மட்டும் கேட்டு விடுவார்களா?ரம்மி அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாட திறமை அவசியம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுக்கள்கூட சூதாட்டம் ஆகிவிட்டதாக தெரிவித்த சரத்குமார்.
மேலும் என் கிரெடிட் கார்டில் 10 லட்சம் ரூபாய்தான் லிமிட். அதற்கு மேல் உள்ள தொகைக்கு என்னால் விளையாட முடியாது. அதுபோலதான் அனைவருக்கும் விதி இருக்கிறது. ஆனால் குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளவர்களைக் கூட ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கிறார்; இந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் எச்சரிக்கை அறிவிப்புகள் வருகின்றன என பல உயிர்களை காவு வாங்கி கொண்டிருக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் சரத்குமார் நடித்ததில் எந்த தவறும் இல்லை என்று பொறுப்பற்ற முறையில் பேசியது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் விஷால் சமீபத்தில் நிகழ்ச்சி ஓன்று பேசுகையில், ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடிக்க என்னை கேட்டபோது நான் மறுத்துவிட்டேன், உழைத்து சம்பாதிக்கும் பணம் மட்டுமே உதவும், தவறான வழிகளில் கிடைக்கும் பணம் நிலைக்காது. பலரது தற்கொலைக்கு காரணமாக இருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என விஷால் பேசியுள்ளது, சரத்குமாருக்கு தக்க பதிலடியாக அமைத்துள்ளது என கூறப்படுகிறது.