விஷால் வாயை திறந்தாலே பொய்… செத்து போனவர் பணத்தை கூட ஆட்டைய போடும் போர்ஜரி செய்யும் விஷால்..

0
Follow on Google News

நடிகர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கம் சார்பில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெற வில்லை, தமிழ் சினிமாவை வாழ வைத்த கேப்டன் விஜயகாந்துக்கே நடிகர் சங்கம் இந்த அளவுக்கு தான் மரியாதை செய்கிறது என்றால், சாதாரண நடிகர்களின் நிலை என்னவாக இருக்கும் என மக்கள் நடிகர் சங்கத்தை காறி துப்புவதை விஜயகாந்த் மரணத்தில் பார்க்க முடிந்தது.

மேலும் நடிகர் சங்கம் கண்டு கொள்ளவில்லை என்றால் என, மக்கள் நங்கள் கேப்டனை மறப்போமா என லச்சக்கணக்கில் பொதுமக்கள் கூடி கண்ணீர் அஞ்சலி செலுத்த, இதை நடிகர் சங்கமும், விஜயகாந்த் மறைவுக்கு வராத நடிகர்களும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனை தொடர்ந்து மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக வேறு வழியின்றி விஜயகாந்த்க்கு இரங்கல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது நடிகர் சங்கம்.

விஜயகாந்த்க்கு கூடிய மக்கள் கூட்டத்தை எப்படியாவது நாம் கவர்ந்து விட வேண்டும் என்கின்ற ஒரு நோக்கில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பார்த்து இரங்கல் கூட்டத்தில் பேசிய நடிகர் விஷால், நான் ஒரு அண்ணனாக உனக்கு உதவி செய்கிறேன், உன்னுடைய படத்தில் நான் நடிக்கிறேன் என்று பேசியது மிகப்பெரிய கேலிக்கூத்தாக அமைந்துள்ளது.

அதாவது விஷால் எந்த அளவுக்கு ஒரு போர்ஜரி பண்ண கூடியவர் என்பதற்கு பல உதாரணங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. சின்னத்தம்பி படத்தை எடுத்த தயாரிப்பாளர் பாலு கொரோனா காலத்திற்கு முன்பு விஷாலை வைத்து ஒரு படம் தயாரிப்பதற்காக பெருந்தொகையை அட்வான்ஸ் ஆக கொடுத்தார். ஆனால் அந்த படம் எடுப்பதற்கு முன்பே கொரோனா தொற்றால் அந்த தயாரிப்பாளர் இறந்து விட்டார்.

உடனே மரணம் அடைந்த தயாரிப்பாளர் பாலுவின் மனைவியை சந்தித்த விஷால் கவலைப்படாதீர்கள். உங்கள் கணவர் எனக்கு அட்வான்ஸ் கொடுத்த இந்த படத்தில் நிச்சயம் நான் நடித்து கொடுப்பேன். மேலும் அந்தப் படத்தில் வரும் லாபத்தை உங்களுக்கு அப்படியே சமர்ப்பிப்பேன் என்றெல்லாம் துக்க வீட்டில், எப்படி தற்பொழுது விஜயகாந்த் மகன் சமூக பாண்டியனிடம் அண்ணன் நான் இருக்கிறேன் என்று அள்ளி விடுகிறாரோ.!அதேபோன்று அன்று அள்ளிவிட்டார்.

ஆனால் அவர்களுக்கு கால் சீட்டும் கொடுக்கவில்லை. வாங்கி அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்து அடித்தார் விஷால். ஒரு கட்டத்தில் நீ கால் சீட் தரவேண்டாம் கணவர் பாலு கொடுத்த பணத்தை திருப்பி கொடு என விஷாலிடம் கேட்டார் பாலு மனைவி. ஆனால் இறந்தவர் பணத்தை ஏப்பம் போட்டு விடலாம் என இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என ஏமாற்றி வந்துள்ளார் விஷால்.

ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில், பாலுவின் குடும்பத்தார் எங்களுடைய மகள் படிக்க வைப்பதற்கு கூட நாங்கள் சிரமப்படுகிறோம் விஷால் வாங்கிய பணத்தை திருப்பி பெற்று தாருங்கள் என முறையிட்டு, பல கட்ட பஞ்சாயத்துக்கு பின்பு தான் விஷாலிடம் மல்லுக்கட்டி கணவர் கொடுத்த பணத்தையே திரும்பி வாங்கினார்கள் பாலு குடும்பத்தினர்.

அந்த அளவுக்கு இறந்தவர் பணத்தையே ஏப்பம் விட பார்த்த விஷால் விஜயகாந்த் மகனுக்கு உதவி செய்யப் போவதாக சொல்வதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று மேலும் விஜயகாந்த் கூடிய மக்களை இம்ப்ரஸ் செய்வதற்கான வேலை தான் இது என்றும், ஆனால் மக்கள் இனியும் சினிமா நடிகர்கள் செய்யும் போர்ஜரிகளை நம்புவதாக இல்லை. மக்கள் ரெம்ப தெளிவாக இருக்கிறார்கள் என்பது அடுத்தடுத்து விஜயகாந்த் தகுந்த மரியாதை செலுத்தாத நடிகர்கள் படம் படுதோல்வி அடையும் போதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் உணர்வார்கள் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.