லட்சுமி மேனன் உடன் திருமணம்… விஷால் வெளியிட்ட பரபரப்பு தகவல்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளை பெற்றார். நடிக்கும் அனைத்து படங்களையும் தொடர்ந்து ஹிட்டும் கொடுத்து வந்தார். அதுமட்டுமின்றி இவர் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்,

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி பிடிவாதமாக இருந்து வருகிறார். நடிகர் விஷால் சிங்கிளாக இருப்பதால், அவருடன் நடிக்கும் நடிகைகள் எளிதில் கிசுகிசுவில் சிக்கி விடுகின்றனர். அந்த வலையில் தற்போது சிக்கியவர் தான் லட்சுமிமேனன். இவர் தன்னுடைய சிறுவயதிலேயே நாயகியாக கும்கி படத்தில் அறிமுகமானவர். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷாலுடன் இணைந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இவர்கள் இணைந்து நடித்த அனைத்து படங்கள் ஹிட் ஆகி வந்தனர். அதுமட்டுமின்றி நான் சிகப்பு மனிதன் படத்தில், இவர்களின் கெமிஸ்ட்ரி பங்கமாக இருக்கும். இதனால் அப்பொழுதே இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் இருந்தன. மேலும், திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின. இதனை தொடர்ந்து லட்சுமி மேனன் மார்க்கெட் படி படியாக குறைந்து வந்தது. தற்பொழுது எந்த வாய்ப்பும் இன்றி பரிதாப நிலையில் உள்ளார்.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவியது. மேலும் அனிஷாவும் தனது இணையதள பக்கத்திலிருந்து விஷாலுடன் எடுத்த புகைப்படங்கள், நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார்.

அதனை தொடர்ந்து அனிஷாவிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல்கள் பரவியது. இதற்கிடையில் தற்போது விஷாலுக்கு மீண்டும் திருமணம் என்ற தகவல் பரவி வருகிறது. அதுவும் பல வருடங்களுக்கு முன்பு லட்சுமிமேனனுடன் வந்த கிசுகிசு உயிர் பெற்றுள்ளது. அதாவது தற்போது மீண்டும் லட்சுமி மேனனுடன் விஷாலுக்கு திருமணம் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

தன்னுடைய திருமணம் மற்றும் காதல் குறித்து எப்போதும் பேசாத விஷால், தற்போது முதல்முறையாக தன்னுடைய மௌனம் கலைத்துள்ளார். அதனைக் குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “பொதுவாக என்னைப் பற்றிய வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்று பரவி வரும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது. என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைத்து அவருடைய அடையாளத்தை கெடுக்கிறீர்கள்.

ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.