நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை விஷாலின் நெருங்கிய நண்பரான ரமணா தயாரிக்கிறார். சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் தேதி அன்று லத்தி படம் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கான இறுதி கட்ட வேலைகளில் இதுவரை விஷால் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இதனால் இந்த படம் குறிப்பிட்ட செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மற்ற தயாரிப்பாளர்களிடம் தான் விஷால் இதுபோன்று பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார் என்றால், அவருடைய நண்பர் ரமணா தயாரிக்கும் படத்திலும் அதே பார்முலாவை பின்பற்றி வருவதால், இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரமணா மற்றும் விஷால் இருவரும் அவருடைய நட்பை முறித்துக் கொள்வார்கள் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.
இந்நிலையில் விஷால் நடிக்கும் மற்றொரு படமான மார்க் ஆண்டனி முதல் கட்ட படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. அடுத்த 30 நாளுக்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணி முடிந்து, படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் இன்றைக்கு எனக்கு களைப்பாக இருக்கிறது நாளை படப்பிடிப்பு வைத்துக் கொள்வோம் என கேன்சல் செய்துவிட்டு சென்றுள்ளார் விஷால்.
இதேபோன்று தொடர்ந்து படப்பிடிப்பு தளத்திற்கே வராமல் தொலைபேசியில் நாளைக்கு வருகிறேன் என்று 30 நாட்களும் இதே தகவலை இயக்குனரிடம் தெரிவித்து வந்துள்ளார் விஷால். இதனால் இரண்டாம் கட்ட சூட்டிங் தொடர்ந்து கேன்சல் செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மூன்று கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மார்க்ஆண்டனி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான எந்த ஒரு தகவலும் விஷாலிடம் இருந்து வரவில்லை, இதனால் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்க, விஷால் வீட்டிற்கு இயக்குனர் சென்றுள்ளார். அங்கே விஷால் தூங்கிக் கொண்டிருக்கிறார் என தகவல் தெரிவிக்க, வீட்டின் வெளியே நின்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சத்தமிட்டு விஷாலை, மார்க் ஆண்டனி இயக்குனர் திட்டியதாக கூறப்படுகிறது.
விஷால் வீட்டில் இருந்த மற்றவர்கள் விஷால் தூங்குகிறார் பிறகு பேசிக்கலாம் என அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுப்பார்கள். ஆனால் நடிகர் சங்கம் பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷாலே, இப்படி செய்வதால் என்ன செய்வது என்று புரியாமல் இந்த பஞ்சாயத்து நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கவனத்துக்கு சென்றுள்ளது.
அதற்கு கார்த்திக் பொன்னியின் செல்வன் படம் வேலைகள் முடிந்த பின்பு இந்த பிரச்சனை குறித்து பேசுவோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதே போன்று லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுக்காததால் அந்நிறுவனம் தொடர்ந்து வழக்கில் விஷால் சொத்துக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் இது குறித்து எந்த ஒரு டென்ஷன் இல்லாமல் ஜாலியாக விஷால் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து விசாரித்ததில் விஷால் பெயரில் எந்த ஒரு சொத்துக்களும் இல்லை, அவருடைய சகோதரி மற்றும் அவருடைய பெற்றோர்கள் பெயரில் தான் சொத்துக்கள் இருக்கிறது. இதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பு இல்லை என ஜாலியாக இருக்கும் விஷால், மேலும் லைக்கா நிறுவனத்தில் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் ரொம்ப கூலாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இதுபோன்று பல போர்ஜரி வேலைகளை செய்து வரும் விஷால், பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுத்தால் , உதயநிதி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, நான் யார் தெரியுமா.? உதயநிதி என்னுடைய நண்பர் என்றெல்லாம் அவர் உதயநிதி பெயரை தவறாக பயன்படுத்தி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.