நடிகர் விஷால் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் லத்தி, இந்த படத்தில் டீசர் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. டீசர் வெளியிட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது உதயநிதி அருகில் வைத்து கொண்டு விஷால் பேசியதாவது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது இருந்தே நண்பர்கள்.
ஸ்டாலின அங்கிள் ஒரு காலத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அந்தப் பிரச்சார வண்டிக்கு உள்ளே அமர்ந்து கொண்டு நானும் மற்றும் ஒரு நண்பர் அன்பில் மகேஷ் அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, கண்டிப்பாக உதயநிதி அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்வோம். ஆனால் அப்போது உண்மையில் உதயநிதிக்கு அரசியல் வருவதற்கான ஆர்வம் இல்லை.
கோபாலபுரத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது நூற்றுக்கணக்கான போலீஸ் ஆட்சியில் இருக்கும்போது இருப்பார்கள். ஆனால் அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து விட்டால், ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும்தான் அங்கு இருப்பார். ஆனால் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருப்போம். நல்லது, கெட்டது, வெற்றி, தோல்வி அனைத்தையும் பார்த்து விட்டாச்சு என தெரிவித்த விஷால்.
மேலும், என்னுடைய ஆசை புதியதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் கலைஞர் ஐயா பெயரும், ஸ்டாலின் அங்கிள் பெயரும் இடம் பெற வேண்டும். இன்று நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் அந்தக் கனவு விரைவில் நினைவாக போகிறது. இது உதயநிதி என்னுடைய நண்பன் என்பதற்காக அல்ல, ஒரு வரலாற்று சிறப்புமிக்க அந்தக் கட்டிடம் வரக்கூடிய காலகட்டத்தில். வரலாற்று சிறப்புமிக்க பெயர் அந்த கட்டிடத்தில் பதிவாக வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என விஷால் பேசியிருந்தார்.
இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் பதிலளித்துள்ளார், அவர் தெரிவித்ததாவது, நடிகர் சங்க கட்டிடத்தில் விஷால் சொன்னது போன்று கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பெயர்கள் இடம்பெறவேண்டும் என்பது நடக்க கூடாத ஒன்று. இந்த கட்டிடம் அரசியல் கட்சி கட்டிடம் அல்ல, அல்லது விற்பனைக்கான கட்டிடமும் அல்ல, இப்படி அறிவிக்க விஷாலுக்கு அனுமதி கொடுத்தது யார் என கேள்வி எழுப்பிய காயத்ரிரகுராம்.
மேலும், தகுதியற்ற பொதுச் செயலாளராக நடிகர் சங்கத்தில் இருக்கின்றார் விஷால். உங்கள் படத்தின் வெளியிட்டிற்கான விளம்பர வித்தை தான் இது, விஷால் இப்படி செய்வதால் யாரும் பாராட்ட போவது கிடையாது. ஒரு மையத்திற்கு நீங்கள் ஜிங்ஜாப் அடிக்கிறீர்கள் விஷால் என பதிலடி கொடுத்துள்ளார் காயத்ரி ரகுராம்.