பிரபல குணச்சித்திர நடிகர் வினோத் சக்கரவர்த்தி, தமிழ், மலையாளம் என சுமார் 100 படங்கள் வரை குணச்சித்திர வேலைகளில் நடித்த வினு சக்கரவர்த்தி, தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி நடிகை சில்க் சுமிதவை அறிமுகம் செய்து வைத்த பெருமையும் அவரையே சேரும். பொதுவாக மிமிக்கிரி ஆர்டிஸ்ட்களுக்கு இவர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வினு சக்கரவர்த்தி. பல படங்களுக்கு திரைகதையும் எழுதியுள்ளார் அதில் நடிகர் சிவக்குமார் நடித்த வண்டிச்சக்கரம் போன்ற பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை எழுதியவர் வினுசக்கரவர்த்தி. அவருடைய குடும்பத்தினர் லண்டனில் செட்டில் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் அவருடைய மரணத்திற்கு முன்பு கடைசி காலகட்டத்தில், அவர் தங்கள் குடும்பத்தினருடன் லண்டனில் சில காலம் இருந்தார். அப்போது அவருக்கு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி 1980 ஆம் வருடம் தன்னுடைய திரை கதையில் வெளியான வண்டிச்சக்கரம் படத்தை மீண்டும் வண்டி சக்கரம் பார்ட் 2 என எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை வினுச்சக்கரவர்த்திக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா வந்தவர் நேரடியாக இசைஞானி இளையராஜாவை சந்தித்து தன்னுடைய வண்டிச்சக்கரம் படத்தின் பார்ட் 2 டுக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நீங்கள் தான் இசை அமைக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு இளையராஜாவும் ஓகே தெரிவித்து படத்திற்கான சம்பளம் 75 லட்சம் கேட்டுள்ளார். அதற்கு வினு சக்கரவர்த்தி நமக்குள்ள எதுக்கு இவ்வளவு என இதில் 50 லட்சம் சம்பளம் பேசி முடிக்கப்பட்டது.
உடனே ரூபாய் 50 லட்சணத்திற்கான காசோலையையும் இளையராஜாவிடம் கொடுத்துள்ளார் வினுச்சக்கரவர்த்தி. இதன் பின்பு தனக்கு நெருக்கமான மற்றொரு ஒருவரிடம் தான் புதிதாக வண்டிச்சக்கரம் பார்ட் 2 படம் எடுக்க இருப்பது குறித்து தெரிவித்துள்ளார் வினு சக்கரவர்த்தி. கதையை கேட்ட அவர், நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள். இப்போது எல்லாம் இந்த படம் எடுத்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு நஷ்டம் தான் என எச்சரித்துள்ளார் கதை கேட்ட அந்த நபர்.
இதை தொடர்ந்து, இந்த படத்தை கைவிட முடிவு செய்த வினுசக்கரவர்த்தி உடனே, இளையராஜாவை நேரில் சந்தித்து இந்த படத்திற்கு புதிய தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்துவிட்டார்.அவர் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன் என்று தெரிவித்துவிட்டார். அதனால் நான் கொடுத்த காசோலையை நீங்கள் திருப்பித் தாருங்கள். உங்களுக்கு தயாரிப்பாளர் நாளை அந்த படத்திற்கான சம்பளத்தை கொடுப்பார் என வினு சக்கரவர்த்தி தெரிவிக்க.
உடனே வாங்கிய 50லட்சம் ரூபாய் காசோலையை இளையராஜா திருப்பி கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வண்டி சக்கரம் படத்தை பாகம் 2 எடுப்பதை கைவிட்டு விட்டு. அடுத்த நாளே லண்டன் சென்று தன்னுடைய குடும்பத்தினருடன் செட்டிலானார் வினு சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது