சட்டவிரோத செயலால் சிக்கலில் விஜய்யின் வாரிசு படம்… கேமராவில் சிக்கியது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது, தெலுங்கு படத்தின் முன்னணி இயக்குனர் வம்சி மற்றும் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் ஆகியோர் கூட்டணியில் விஜய் நடித்துவரும் வாரிசு படம் அஜித் நடிக்கும் துணிவு படம் வெளியாகும் அதே தேதியில் வருவதால் தமிழ்நாட்டில் போதிய திரையரங்கு கிடைக்காமல் படம் வெளியிடுவதில் சிக்கலை சந்தித்தது.

அதன் பின்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பண்டிகை நாட்களில் தெலுங்கு படத்திற்கு தான் முன்னுரிமை என்று தெலுங்கு சினிமா துறையினர் போர்க்கொடி தூக்க, அங்கேயும் வாரிசு படம் வெளியாவதில் சிக்கலில் சிக்கியது. இந்த நிலையில் வாரிசு படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாவதால் அந்த பண்டிகையை ஒட்டி ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல் காட்சி நடைபெறும் படப்பிடிப்பில், சுமார் 100 காலை மாடுகள், 20 குதிரைகள், 5 யானைகள் என விலங்கு நலன் அமைப்பிடம் அனுமதி பெறாமல் விலங்குகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக படப்பிடிப்பு எடுத்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்த படப்பிடிப்பில் பங்கேற்ற யானைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்வதாக பொய்யான தகவல்களை தெரிவித்து படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கையும் களவுமாக பிடிக்க களத்தில் இறங்கிய ஒரு பத்திரிக்கையாளர் ட்ரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு தளத்தை வீடியோ எடுத்துள்ளார், படப்பிடிப்பு தளத்தின் ட்ரோன் கேமரா பறப்பதை பார்த்த பட குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பட குழுவினர் அவர்களும் ஒரு ட்ரோன் கேமரா மூலம் யார் இதை செய்கிறார்கள் என்று ஆராய்ந்து அந்த பத்திரிக்கையாளரை பிடித்துள்ளனர்.

இதில் விஜய் ரசிகர்களும் படக்குழுவினருடன் சேர்ந்து அந்த பத்திரிக்கையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் அதிகரிக்க அந்த பத்திரிக்கையாளரை காரில் விஜய் ரசிகர்கள் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்புல் நடந்த இந்த தகவல் வெளியான பின்பு, தற்போது விலங்கு நல வாரியம் வாரிசு படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படம் சென்சாருக்கு செல்லும் பொழுது, விலங்கு நல வாரியம் சான்றிதழ் தரவில்லை என்றால், சென்சாரில் வாரிசு படம் நிராகரிக்கும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. அதனால் பெரும் செலவு செய்து காளைமாடு, குதிரை, யானை என பங்கேற்க வைத்த அந்த பாடல் காட்சி அந்த படத்தில் இடம் பெற்றால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், சிக்கலில் சிக்கிய பாடல் அந்த படத்தில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என கூறப்படுகிறது.

மேலும் விஜய் சமீபத்தில் தனது ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து அரசியல் குறித்து பேசியது தான் ரசிகர்களை பத்திரிக்கையாளர்களை கடத்தும் அளவுக்கு தூண்டி உள்ளது என்றும், ரசிகர்களாக இருக்கும் பொழுதே இவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அரசியலுக்கு வந்தால் மேலும் இவர்கள் அட்டகாசம் அதிகரிக்கும் என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.