பரபரப்பை ஏற்படுத்தும் விஜய்யின் அரசியல் குறும்படம்…அரசியல் அதிரடியை தொடங்கிய விஜய்…

0
Follow on Google News

விஜய் இதற்கும் மும்பு தமிழக அரசியலில் பெரும் ஜாம்பவான்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உயிருடன் இருக்கும் போதே இரண்டு திராவிட கட்சிகளிடமும் பகையை ஏற்படுத்தி கொண்டவர். விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தின் பொழுது அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கும் விஜய்க்கு ஏற்பட்ட உரசல் காரணமாக காவலன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் ஆதரவில் காவலன் படம் திரைக்கு வந்தது. இதன் பின்பு 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாய்ஸ் கொடுத்தார் நடிகர் விஜய். இதன் பின்பு ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்பு விஜயின் தந்தை சந்திரசேகர் பல இடங்களில் எங்களால் தான் ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று பேச, அது ஜெயலலிதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதன் பின்பு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஒரு வசனத்தினால் தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்படி திமுக – அதிமுக இரண்டு கட்சிகளிடமும் அவ்வப்போது பகை பகையை வளர்த்துக் கொண்ட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சசர்க்கார் படத்தில் இடம்பெற்ற அரசியல் கருத்துகளால் பெரும் சிக்கலை அந்த படம் சந்தித்தது.

இதன் பின்பு விஜய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்கள் விஜய்யிடம் அரசியல் பஞ்ச் வேண்டாம் என கேட்டுக் கொண்டதை தொடர்ந்து விஜய் சினிமா மற்றும் ஆடியோ விழாவில் அரசியல் பேசுவதை தவிர்த்து வந்தார்.ஆனால் தற்பொழுது மீண்டும் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை தொடங்கியுள்ளார் விஜய். வரும் ஜூன் 22 அன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் தின கொண்டாட்டத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையிலே தற்போது இருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் விஜயின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் டீசர் வெளியாகும் என்று ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு தகவல் பரவி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, அதாவது விஜயின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு சிறிய குறும்படம் ஒன்று விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று ஒரு தகவல் வெளியகியுள்ளது.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்துக்கு ஒரு பெரிய விருப்பம் இருந்துள்ளது. அதாவது நடிகர் விஜயின் ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கை, அவர் சந்தித்த அவமானங்கள், அவர் ரசிகர் மத்தியில் ஒரு ஹீரோவாக உருவானது, என ஒரு பிரம்மாண்டமான வீடியோவை வெளியிட வேண்டும் என்கின்ற ஒரு தன்னுடைய ஆசையை நேரடியாக நடிகர் விஜய்யிடம் தெரிவித்துள்ளார் லலித்.

இதற்கு நடிகர் விஜய்யும் சம்மதம் தெரிவித்து விட்டதால், அதற்கான வேலைகளை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் வாழ்க்கை வரலாறு கொண்ட அந்த குறும்படம் விஜய் பிறந்த நாள் ஜூன் 22 அன்று வெளியிட போவதாக கூறப்படுகிறது. அப்படி விஜயின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் வீடியோ வெளியாகும் பொழுது அது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும்.

அதே போன்று விஜய் பிறந்த நாள் அன்று வெளியாக இருக்கும் விஜய் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படத்தில் விஜய் சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய புழுக்கத்துக்குப் பின் மழை வருவது போல, நெருக்கடி நெருங்கும்போது அடிபட்டு, நொந்து நூலாகி நல்லவர்கள் முன்னே வருவார்கள். அதுதான் இயற்கை. அப்படி வரும் ஒருத்தருக்கு கீழே ஒரு சர்கார் வரும்! என விஜய் பேசிய அந்த கிளிப்பிங்ம் இடம் பெரும் என கூறப்படுவதால் குறும்படம் வெளியான பின்பு அடுத்த விஜய்யின் அரசியல் நகர்வுகள் அதிரடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.