விஜய் அரசியல் கட்சி சாத்தியம் இல்லை… எல்லாம் ரஜினி செய்த அதே தந்திரம் தான்…

0
Follow on Google News

2021 சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்க முடிவு செய்துள்ளேன் அரசியல் ரொம்ப கெட்டுப்போய்விட்டது; ஜனநாயகம் சீர்க்கெட்டுப்போய் விட்டது” நான் எல்லாம் பண்ணிட்டேன். இனி அம்பு விடுறதுதான் பாக்கி என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தனது ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டார்.

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்புக்கு பின்பு, இதோ கட்சியை தொடங்கி விடுவார் என பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது, ஆனால் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த புது புது படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது தவிர அவருடைய அரசியல் கட்சி பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை, இதனைத் தொடர்ந்து புதிய புதிய படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த ரஜினிகாந்த் அரசியல் கட்சி எப்போ என்பது பற்றி தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கூட, அதாவது 2020 டிசம்பர் மாதம் 3ம் தேதி, ரஜினிகாந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்,இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை, என தெரிவித்திருந்த ரஜினி.

மேலும் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும் என சட்டசபை தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு கூட அரசியலுக்கு வருவதை உறுதி படுத்துவது போன்று தெரிவித்த ரஜினிகாந்த்.

மேலும் ஜனவரி மாதம் தொடங்கவதற்கான தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி, மற்றும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்தார் ரஜினி. ஆனால் 2020 டிசம்பர் இறுதியில் கொரோனா காரணமாக, மேலும் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என ரசிகர்களுக்கும், அவரை நம்பி இருந்த தமிழக மக்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு அண்ணாத்தே படத்தில் பிஸியானார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துவிட்டு, அடுத்த இரண்டு வருடங்களுக்கு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தன்னுடைய அரசியல் கட்டமைப்பை வலுவாக உருவாக்குவதற்காகவும் மற்றும் அரசியல் வியூகங்களை வகுக்குவதற்காகவும் இரண்டு வருடங்கள் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் படம் தான் விஜய்யின் கடைசி படம் என கூறப்பட்டது.

ஆனால், தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படமும், அதை முடித்துவிட்டு மீண்டும் லலித் தயாரிப்பில் மற்றொரு படமும் விஜய் நடிக்க இருப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருவதால் அவர் 2026 தேர்தலில் களம் காண்பது அரிது என கூறப்படுகிறது.

அந்த வகையில் நடிகர் ரஜினி எப்படி அரசியல் அறிவிப்பை கொடுத்துவிட்டு, அடுத்தடுத்து அவருடைய படத்தை வெளியிட்டு இறுதியில் ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தாரோ.! அதேபோன்ற செயலைத்தான் விஜயும் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், தன்னுடைய படத்தை ஓட வைப்பதற்காகவும் தன்னுடைய சம்பளத்தை அதிகரிக்கவும் தான் விஜய் இது போன்ற அரசியல் ஸ்டான்ட்டை ரஜினியை பின்பற்றி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.