காற்றில் பறக்கும் விஜயின் மானம்… எல்லாம் தயாரிப்பாளர் வாயை வெச்சுட்டு இருந்துருக்கணும்..

0
Follow on Google News

சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் விஜய் ரசிகர்களை மிக பெரிய அளவில் ஏமாற்றி விட்டது. தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வரும் லியோ படம் வெளியான பல திரையரங்குகள், படம் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கி வருகிறது.

லியோ படத்தை பலரும் கழுவி கழுவி ஊத்தி வந்தாலும், படம் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருக்கிறார். முதல் வார முடிவில் 461 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதெல்லாம் ஃபேக்கான வசூல் ரிப்போர்ட் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

அதற்கு பதிலடி கொடுத்த லலித்குமார் வசூல் விவகாரத்தில் நான் ஏன் பொய் சொல்ல வேண்டும். உண்மையைத்தான் சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார் லலித், இந்நிலையில் லியோ படம் வெளியானதில் இருந்தே திரையரங்கு சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தயாரிப்பாளர் லலித்தை ஒரு வழியாக்கி கொண்டிருக்கிறார்.

அதாவது லலித் 80% லாபத்தை தியேட்டர் உரிமையாளர்களிடமிருந்து லியோவுக்காக வாங்கியது தான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாக இருக்கிறது. இதை பற்றி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வரும் திருப்பூர் சுப்பிரமணியன் லியோ பாக்ஸ் ஆபிஸ் மோசடி பற்றியும் கூறி பகீர் கிளப்பி இருந்தார். அதற்கு லலித் ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார்.

இப்படி இருவரும் மாறி மாறி முட்டிக்கொண்ட நிலையில் திருப்பூர் சுப்பிரமணியன், லியோ படத்திற்கு விநியோக உரிமையை அவரிடம் நான் கேட்டதாகவும், அவர் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். நான் சினிமாவுக்கு வந்து 42 வருஷம் ஆகிடுச்சு. மாஸ்டரில் எனக்கும் அவருக்கும் ஒரு மனப்பிரச்சினை இருந்தது. அதுகுறித்து அவர் பேசினால் நான் விளக்கம் தருகிறேன்.

அதன்பின்பு எங்களுக்குள் தொடர்பு இல்லை. காஷ்மீரில் லியோ படப்பிடிப்பின்போது, திடீரென காலை 11.30 மணிக்கு போன் செய்து ஒரு இரண்டரை கோடி பணம் ஒரு மணிக்குள் வேண்டும் என்றார். எனக்கு கொடுக்க விருப்பமே இல்லை. ஆனாலும், ஒரு பெரிய படப்பிடிப்பு அங்கு நடக்கிறது. இது சாதாரண உதவி என்றும், அவர் கேட்டது போலவே ஒரு மணிக்குள் இரண்டரை கோடி அனுப்பி வைத்தேன்.

நாளைக்கே நான் மொத்த தியேட்டர் லிஸ்ட்டையும் வெளியிடுகிறேன் என்று அவர் ஆவேசத்துடன் சவால் விட்டிருக்கிறார். மேலும் உதாரணத்திற்கு சேலத்தில் மட்டுமே 40 தியேட்டருக்கு மேல் லலித் வாங்கி இருக்கிறார். அப்படி இருக்கும்போது மொத்த தமிழ்நாட்டையும் கணக்கிட்டால் அவரின் முகத்திரை வெட்ட வெளிச்சமாகி விடும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் லியோ படத்துடன் வேறு ஒரு படம் போட்டிக்கு வெளியாகி இருந்தால் லியோ படத்திற்கு குறைவான தியேட்டர்கள் தான் கிடைத்திருக்கும். தமிழகத்தில் பல திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமே இல்லாமல் தான் லியோ படத்தை வெளியிட்டார்கள். தீபாவளி வரை இனி புதிய படங்கள் வெளியாகாது அதுவரை தியேட்டரை பூட்டி வைத்திருக்க முடியுமா? அதனால் தான் லியோ படத்தை வெளியிட்டனர். இதை பயன்படுத்திக்கொண்டு லலித் குமார் அதிகமாக பங்கு கேட்டு தியேட்டர் உரிமையாளர்களின் லாபம் கிடைக்காமல் செய்துவிட்டார்

படம் வெளியாகி பாதி திரையரங்கில் வேறு படத்தை போடும் நிலைக்கு வந்துவிட்டனர். ஆனால் ரசிகர்கள் 500 கோடி 100 கோடி என்று எவ்வளவு உருட்டு உருட்டினாலும் இனி வேலைக்காகாது. ஏனெனில் தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்தினால் எங்களுக்கு எந்த வித லாபம் கிடையாது தலையில் துண்டு போடும் நிலைக்கு வந்து விட்டதாக புலம்ப ஆரம்பித்துள்ளனர். இன்னும் படம் 1000 கோடி வசூல் செய்ய என்று தயாரிப்பாளர் வடை சுட்டாலும் நம்புவதற்கு தயாராக இல்லை மக்கள்.