விஜய்க்கு இருக்கும் மிக பெரிய சிக்கல்…. எச்சரிக்கும் பிரபல ஜோதிடர்…

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியல் என்ட்ரி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜய் முழு நேர அரசியலில் எப்போது தொடங்குவார், விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தால் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவாரா.? மேலும் விஜய் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் தான் கடைசி படம் என, விஜய் குறித்த பல தகவல்களும், அவர் குறித்த விவாதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் அரசியலில் என்ட்ரி கொடுத்தால், எம் ஜி ஆர் மாதிரி வெற்றி அடைவரா.? ரஜினிகாந்த் மாதிரி அரசியல் கட்சி தொடங்கமலே பின் வாங்கி விடுவாரா.? அல்லது மற்ற பல நடிகர்கள் அரசியல் என்ட்ரி கொடுத்து அரசியலில் அட்ரஸ் இல்லாமல் போனது போன்ற நிலை விஜய்க்கு ஏற்படுமா.? என பல அரசியல் பார்வையாளர்கள், அவரவர் பார்வையில் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் விஜய் அரசியல் மற்றும் சினிமா குறித்து அவருடைய ஜாதகத்தின் அடிப்படையில் அவர் சொன்ன தகவல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், 29.10.2026 வரை விஜய் அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யக்கூடாது என எச்சரிக்கும் ஜோதிடர்.

விஜய் அரசியலுக்கு வேலைகள் அதுவாகவே நடக்கும் என்றும், மேலும் நடிகர் விஜய் கடக ராசிக்காரர், கடகத்தில் சனி இருக்கிறது, அந்த வகையில் கடகத்தில் சனி இருந்தால் அந்த நபர் மக்களுக்கு பிடித்தமான ஒரு தலைவராக வருவதற்கு வாய்ப்பு இருக்கு , இது போன்ற ஜாதகம் இதற்கு முன்பு காமராஜருக்கு இருந்துள்ளது. மேலும் விஜய் ஜாதகத்தில் சனியும் ராகுவும் உச்சத்தில் இருப்பதால், மக்கள் மத்தியில் ஒரு ஈர்க்கக்கூடிய ஒரு நபராக அவர் வருவார்.

விஜய்க்கு கடக ராசியில் சனி உச்சத்தில் இருப்பதால், அவருடைய அரசியில் என்ட்ரி கொடுக்கும் போது மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார், ஆனால் 2026 அக்டோபர் வரை அரசியல் தொடர்பான எதுவுமே விஜய் செய்யக்கூடாது. நடிகர் விஜயின் ஜாதகப்படி அவருடைய அரசியல் கட்சியின் சின்னமானது, ஆயுதங்களை சின்னமாக வைத்துக் கொண்டால் அது மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும்.

உதாரணத்திற்கு அருவா, ஈட்டி, கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்கள் சின்னமாக அமைந்து அப்படி ஒரு சின்னத்தில் போட்டியிட்டால், விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என தெரிவிக்கும் ஜோதிடர், மேலும் நடிகர் விஜய்க்கு 2036இல், அதாவது அவருடைய 62 ஆவது வயதில் எதிர்பாராத மிகப்பெரிய இடத்தில் அவருடைய ஜாதகம் கொண்டு சென்று அமர வைக்கும்.

அந்த அளவுக்கு அவருக்கான ராஜ யோகம் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கின்றது. மேலும் விஜயின் சினிமா வாழ்க்கை பற்றி தெரிவித்த ஜோதிடர்கள் தற்பொழுது விஜய் நடிக்க இருக்கும் வெங்கட் பிரபு இயக்கும் படத்தை முடித்துவிட்டு அடுத்த விஜய் நிச்சயம் ஒரு படம் பண்ணுவார், ஆனால் அந்தப் படத்தை இயக்கக்கூடிய இயக்குனர் வேற்று மொழி இயக்குனராக இருப்பார்.

எஅப்படி வேற்று மொழி இயக்குனராக இருந்தால் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை விஜய்க்கு பெற்று தரும் என தெரிவித்த ஜோதிடர், மேலும் விஜய் பண்ண போகும் அந்தப் படத்தின் முதல் எழுத்து ஒரு வடமொழிச் சொல்லுடன் ஆரம்பிக்க வேண்டும், அப்படி ஒரு பெயரும் வேற்று மொழி இயக்குனரும் அமையும் போது விஜய் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி படமாக அந்த படம் அமையும் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.