தனது இறுதி காலம் வரை பிறருக்கு வாரி வாரி வழங்கிய விஜயகாந்தின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ராமானுஜபுரத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அழகர்சாமி மற்றும் ஆண்டாள் இருவரும் குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் மதுரைக்கு வந்து கீரை துறையில் ரைஸ் மில் ஒன்றை ஆரம்பித்து மதுரை மேலமாசி வீதியில் குடியேறியது விஜயகாந்த் குடும்பம்.
அழகர்சாமி- ஆண்டாள் தம்பதியினருக்கு விஜயகாந்த் மட்டுமின்றி நாகராஜ், விஜயலட்சுமி, திருமலா தேவி என்ற குழந்தைகளும் இருந்தனர். கேப்டனின் சிறு வயதிலேயே அவரது தாயார் ஆண்டாள் இறந்து விடுகிறார்.
அதன் பிறகு, தனது அக்காள் மகளான ருக்மணியை அழகர்சாமி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராமராஜ், மீனா குமாரி, சாந்தி மற்றும் பிரித்திவிராஜ் போன்ற குழந்தைகள் இருந்தனர்.
சிறுவயதிலேயே தாயை இழந்த கேப்டன் சித்தியின் பிள்ளைகளோடு உடன் பிறந்த சகோதரரை போலவே பழகி வந்துள்ளார். விஜயகாந்த் உடன் பிறந்த சகோதரர் நாகராஜ் தற்போது உயிருடன் இல்லை என்றாலும், அவரது சித்தி மகனான செல்வராஜ் என்பவர் இப்போதும் மதுரையில் தான் வசித்து வருகிறாராம்.
இவர் அப்பா அழகர்சாமி கீரை துறையில் தொடங்கிய ரைஸ் மில்லுடன் சேர்த்து ஆண்டாள் ருக்மணி என்ற இரண்டு ரைஸ் மில்லில் நடத்தி வருகிறாராம்.
அதுமட்டுமில்லாமல் பல வருடங்களுக்கு முன்பு அழகர்சாமி குடும்பம் குடியேறிய மேலமாசி வீட்டில் தான் செல்வராஜ் வசித்து வருகிறாராம். மேலும் இவர் வருமானத்திற்காக மதுரையில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அண்ணன் விஜயகாந்த் என்னதான் மிகப்பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், தம்பி செல்வராஜ் மதுரையில் எளிமையான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரிப்பது வரை, அனைத்தையும் இறுதி செய்யும் அதிகாரத்தை இப்ராஹிம் ராவுத்தருக்குத்தான் விஜயகாந்த் வழங்கியிருந்தார்.திரைப்படத் தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர், ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேசன்ஸ் மற்றும் ஐ.வி. சினி புரொடெக்சன்ஸ் என்ற பேனர்களில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
பின்னர் சில காரணங்களுக்காக இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்துடன் பிரிந்து சென்றுவிட்டார். 2015ம் ஆண்டு ராவுத்தர் மறைவதற்கு முன்பாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் ராவுத்தரை விஜயகாந்த் அடிக்கடி சென்று சந்தித்து வந்தார்.
இந்நிலையில் கேப்டனின் நெருங்கிய நண்பராக இருந்த இப்ராஹிம் ரவுத்தரின் வளர்ப்பு மகன் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது.
ராவுத்தர் குறித்து விஜயகாந்திடமும் , விஜயகாந்த் குறித்து ராவுத்தரிடமும் யாரோ சிலர் பொய்யான தகவல்களை பரப்பிக் கொண்டே இருந்தனராம். இதனால் இருவரது மனமும் வேதனை அடைந்ததாம். ஒரு நாள் கனத்த இதயத்துடன் விஜயகாந்த், ராவுத்தரை அழைத்து யாரோ சிலர் நமக்குள் விரோதத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள். இப்படி தொடர்ந்து சதி செய்து கொண்டே இருந்தால் நம் நட்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எனவே நாம் சண்டை சச்சரவு இல்லாமல், மன வருத்தம் இல்லாமல் பிரிந்து விடுவதுதான் நல்லது என்றாராம். இதை கேட்ட ராவுத்தர் நொறுங்கி போய் விட்டார் என ராவுத்தர் மகன் தெரிவித்துள்ளார். ஆனால் யார் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நட்பை பிரித்தது என இதுவரை மர்மமாக இருந்து வரும் நிலையில் யார் ராவுத்தர் – விஜயகாந்த் நட்பை பிரித்து இருப்பார்கள் என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.