எதற்காக நடிகர் விஜயகாந்த் சித்திரவதைக்கு உள்ளாகிறார்… எல்லாம் அதுக்கு தான்… மருத்துவரே சொன்ன ரீசன்…

0
Follow on Google News

கேப்டன் விஜயகாந்த், கம்பீர தோற்றம், சிங்கம்போல் கர்ஜிக்கும் குரல் என விஜயகாந்தை கம்பீரமாக பார்த்த மக்கள் சமீபத்தில் நடந்த தேமுதிக செயற்குழு கூட்டத்தில், அவர் கலந்து கொண்ட போது, அவரால் நடக்க முடியாமல் வீல்சேரில் வைத்து மேடைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கே நாற்காலியில் விஜயகாந்த் அமர்ந்திருக்க பின்னால் இருவர் அவரை பிடித்துக் கொண்டே இருந்தனர் காரணம், அவர்கள் விஜயகாந்தை பிடிப்பதை விட்டுவிட்டால் நாற்காலியில் இருந்து விஜயகாந்த் சரிந்து விழுந்து விடுவார்.

இப்படி மிக மோசமான உடல் நிலையில் விஜயகாந்தை பார்த்த மக்கள்.. ஐயோ… எப்படி கம்பிரமாக பார்த்த மனிதனை இப்படி பார்ப்பதா என்று கண் கலங்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஒரு பிரச்சனை என்றதும் விஜயகாந்தே நேரடியாக வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்கக் கூடியவர் அப்படி இருக்கையில் உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் விஜயகாந்துக்கு ஓய்வு தேவைப்படும் இந்த நேரத்தில் தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் கட்சி நிகழ்வுகளுக்கு அழைத்து வருவது விஜயகாந்தை சிரமப்படுத்துவது போன்று அமைந்துள்ளது.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்தை இப்படி படாத பாடு படுத்துவதற்கு முக்கிய காரணமே அவருடைய குடும்பத்தினர், என்றும் குறிப்பாக அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் தான் என பலரும் தற்பொழுது விஜயகாந்த் மனைவி பிரேமலதா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதை பார்க்க முடிகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் விஜயகாந்த் ஆக்ட்டிவாக இருக்கிறார். அவர் நன்றாக தான் இருக்கிறார் என்கிற ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தி, அது தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கான சீட் பேரம் பேசுவதற்கு சரியாக இருக்கும் என்கின்ற ஒரு காரணத்திற்காக தான் இப்படி தேமுதிக கட்சி நிகழ்ச்சிகளில் விஜயகாந்தை அழைத்து வரப்பட்டு சிரமப்படுத்துகிறார்கள் என்று அரசியல் விமர்சனங்களும் பிரேமலதா விஜயகாந்த் நோக்கி எழுந்துள்ளது.

ஆனால் தன்னுடைய கணவரை இப்படி எல்லாம் கஷ்டப்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு மனைவியும் திட்டமிட மாட்டார், அப்படி இருக்கையில் இதற்கு முன்பு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவருடைய கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அதாவது சுய நினைவுகளை இழந்து கொண்டிருந்த போது, கட்சி தொண்டர்களை அவர் இருந்த கோபாலபுரம் வீட்டின் வாசலில் நிற்க தலைவா என்று தொண்டர்கள் கருணாநிதியை பார்த்து கூச்சலிடும் போது, தன்னை அறியாமலேயே உற்சாகத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த கருணாநிதி கையை தூக்கி அசைத்த சம்பவங்களும் உண்டு.

அந்த வகையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட ஒரு அரசியல் தலைவர்கள் தொண்டர்கள் தலைவா என்று அழைக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு கையை தூக்குவது, தன்னுடைய பழைய நண்பர்களை பார்த்ததும் உற்சாகத்தில் சுய நினைவுகள் வரலாம் , அந்த வகையில் தான் உற்சாகமிகு தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பங்கேற்றாள், தொண்டர்கள் அவரைப் பார்த்து கேப்டன் , கேப்டன் என சத்தமிடும் போது, விஜயகாந்துக்கு சுயநினைவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.

அதற்காக கூட அவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அவர் குடும்பத்தினர் குறிப்பாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி இதை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 3 நாட்களே ஆன நிலையில் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பிரேமலதா இவ்வாறு செய்திருக்க மாட்டார் என்றும் கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.