விஜயகாந்த் என்ன சாதாரண மனிதனா.? என்ன பேச்சு பேசுற…ஐஸ்வர்யா ராஜேஸை வெளுத்து வாங்கிய மக்கள்..

0
Follow on Google News

கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவின் காரணமாக சமீபத்தில் மரணம் அடைந்தார். இவரது இறப்பானது அரசியல்வாதிகள் திரைப்பட பிரபலங்கள் மக்கள் கட்சித் தொண்டர்கள் ஆகியவர்களை மிகவும் பாதித்தது மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்த திரைப்பட பிரபலங்கள் ஒவ்வொருவராக இப்பொழுது தான் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதன்படி கார்த்திக், சிவக்குமார் , சூர்யா ஆகிய நடிகர்கள் கேப்டனின் சமாதிக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்ததால் கேப்டன் அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத நிலையில் நடிகர் சூர்யா கோயம்பேட்டில் உள்ள விஜய்காந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்திய வீடியோவானது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவப்பெற்றது.

ஆனால் சூர்யா கண்ணீர் விட்டு அழுததை, யப்பா இது உலக மகா நடிப்புடா சாமி என பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டன் விஜயகாந்திற்கு அவர் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. பொது இடங்களில் பிரபலங்கள் எவ்வாறு பேச வேண்டும் எவ்வாறு பேசக்கூடாது என்பதற்கு தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக ஆகியுள்ளார்.

முன்னதாக ஏனென்றால் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் வந்திருந்தார் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் மறைந்த தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்தின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் நான் இப்பொழுது கடை திறப்பு விழாவிற்காக இங்கு வந்திருக்கிறேன் எனவே அதைப் பற்றிய கேள்வியை மட்டும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மரணத்தின் பொழுது சென்னையில் இல்லை பாண்டிச்சேரியில் இருந்தேன் இப்போதுதான் கடை திறப்பு விழாவிற்காக சென்னை வந்துள்ளேன் ஆகவே என்னிடம் இதைப் பற்றி மட்டும் கேளுங்கள் நான் பதில் அளிக்கிறேன் என்று தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவ்வாறு கூறியிருப்பது இணையத்தில் மிகவும் சர்ச்சையாக மாறியது.

பாண்டிச்சேரி என்பது தொலைதூரத்தில் இருக்கும் ஒரு கண்டம் போல பேசியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷை மக்கள் எங்கள் கேப்டன் உனக்கு அவ்வளவு இளக்காரம் ஆகிவிட்டார் என்று கழுவி ஊற்றி வந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அன்று அவ்வாறு பேசிவிட்டு இன்று வந்து கண் கலங்கி அஞ்சலி செலுத்துவது என்பது பார்ப்பதற்கு இது உலக நடிப்படா சாமி என்று கவுண்டமணி அவர்கள் சொல்வது போல் தான் தோன்றுகிறது. நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருப்பதை பார்க்கும் பொழுது பெரிய அரசியல்வாதிகளே இவரது இந்த நடிப்பின் முன்னாள் தோற்று விடுவார்கள் போல் உள்ளது.

நான் கடை திறக்க தான் வந்தேன் அதைப்பற்றி மட்டும் கேளுங்கள் விஜயகாந்தின் இழப்பை குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று வந்து கேப்டன் போல் ஒரு மகத்தானவரை நான் பார்த்ததே இல்லை அவர் மிகவும் நல்லவர் என கூறி இருக்கிறார். இவ்வாறு இரு வேறு விதமாக பேசி மக்களிடமும் மீடியாவிடவும் வசமாக சிக்கி உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.