கன்னட அமைப்பினர் ரகளை… ஓட ஓட விரட்டிய விஜயகாந்த்..

0
Follow on Google News

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார். போராடி முன்னுக்கு வந்த விஜயகாந்த் புகழ் வெளிச்சத்துக்கு வந்த பிறகு மிதப்பாக இருந்துவிடவில்லை. கஷ்டப்பட்ட பலருக்கும் கை கொடுத்து உதவி இருக்கிறார்.

அவரைச் சந்திக்க வரும் எல்லோருக்கும் வயிறாற சாப்பாடு போட்டுதான் அனுப்புவார் கேப்டன். பொருளாதார உதவி கேட்டு வந்தாலும், வெறும் கையோடு அனுப்பாமல் தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்தி மனநிறைவுடன் தான் வழியனுப்புவார். மற்றவர்களுக்கு நல்லது செய்வதில் இவரை அடித்துக் கொள்ள யாருமே இல்லை.‌சில ஆண்டுகளாக உடல் நல குறைவின் காரணமாக அவஸ்தை பட்டு வருகிறார். இவருக்கு தொடர்ந்து சிகிச்சையும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. மேலும், இவர் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

மேலும் படத்தில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் எத்தனைபேர் வந்தாலும் அடித்து விரட்டும் திறமை கொண்டவர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் தமிழ் செல்வன். பாராதிராஜா இயக்கிய இந்த படத்தில் விஜயகாந்த் ரோஜா மணிவன்னன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரத்தினகுமார் கதை எழுதியிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கார்நாடகாவில் நடைபெற்று வந்தது.

முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்காக அங்கே ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்துள்ளனர். அப்போது காவிரி பிரச்னை தொடர்பாக விஜயகாந்த் பேசிய கருத்து கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் விஜயகாந்த் படப்பிடிப்பு இங்கு நடைபெறுகிறது என்று தெரிந்தவுடன் வட்டாள் நாகராஜ் உள்ளிட்ட பலர் சுமார் 50 பேருடன் கெஸ்ட் ஹவுஸில் வந்து இறங்கி கோஷம்போட தொடங்கியுள்ளனர்..

தமிழ் செல்வன் என்ற படத்தின் பெயரில் இங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என்று சொல்லிக்கொண்டுள்ளனர். இதெல்லாம் பார்த்த இயக்குனர் பாரதிராஜா ரூமுக்கு சென்று விட்டாராம். ஆனால் விஜயகாந்த் அப்படி செய்யவில்லை. அவர் எழுந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு தனது டிரைவரை அழைத்து கார் பின்னாடி திறக்க சொல்லி இருக்கிறார். அதில் பல இரும்பு ராடுகள் இருந்துள்ளன.

அதை எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கெஸ்ட் ஹவுஸ் கேட்டை நோக்கி நடந்து சென்றுள்ளார். அதை எடுத்துக்கொண்டு விஜயகாந்த் கெஸ்ட் ஹவுஸ் கேட்டை நோக்கி நடந்து சென்றுள்ளார். இவர் வருவதை பார்த்த வட்டாள் நாகராஜ் கோஷ்டி அவர் கேட்டுக்கு பக்கத்தில் வருவதற்குள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
அடுத்த நாள் படப்பிடிப்பில் இயக்குனர் தமிழ் செல்வன் என்ற பெயரில் கிளாப் போர்டு அடிக்க மாட்டேன் படத்தின் பெயரை மாற்றுங்கள் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் விஜயகாந்த் படத்தின் பெயரை மாற்ற வேண்டாம். இதே பெயர்தான் நீங்கள் கிளாப்போர்டு அடியுங்கள். படத்தின் பெயரை மாற்றினாலோ, அல்லது நீங்கள் கிளாப்போர்டு அடிக்கவில்லை என்றாலோ நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார். அதன்பிறகு இருவருக்கும் இடையே சமாதானம் பேசி பிறகு அதே பெயரில் படப்பிடிப்பு நடந்துள்ளது.