தமிழ் சினிமாவில் ரஜினி – கமல் என்ற இரு பெரும் ஜாம்பவான்கள் கலக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த இரண்டு நடிகர்களுக்காக இணையான மார்க்கெட்டில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் ரஜினி – கமல் என இரண்டு ரசிகர்களும் மல்லு கட்டிக் கொண்டிருக்கையில், ரஜினி – கமல் இரண்டு ரசிகர்களுக்குமே விஜயகாந்தை பிடிக்கும்.
அந்த அளவுக்கு விஜயகாந்த் அவருடைய ரசிகர் மட்டும் மட்டுமில்லாமல் மற்ற நடிகர்கள் ரசிகர்களும் மக்களும் கொண்டாடும் வகையில் சினிமாவில் மட்டுமில்லாமல் பொது வாழ்க்கையிலும் பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்தவர் விஜயகாந்த். இந்நிலையில் அரசியல் சினிமா என இரண்டிலும் மிக உச்சத்தில் இருந்த விஜயகாந்த், உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 10 வருடமாக அவரால் விறுவிறுப்பாக செயல்பட முடியவில்லை.
இதனால் விஜயகாந்தை மக்கள் மறந்திருப்பார்கள் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கையில் விஜயகாந்தின் மரணத்தின் போது கூடிய மக்கள் கூட்டம் அதையெல்லாம் தவிடுபொடியாக்கியது. விஜயகாந்த் மரணத்திற்கு வராமல் பல நடிகர் நடிகைகள் நியூ இயர் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்தது மக்களின் கோபத்திற்கு உள்ளானார்கள். மேலும் விஜயகாந்த் மரணத்திற்கு வராத ஒவ்வொரு நடிகரையும் மக்கள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.
இதில் சென்னையில் இருந்து கொண்டே பல நடிகர்கள் விஜயகாந்த் மரணத்திற்கு வரவில்லை, குறிப்பாக பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்த அந்த குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட விஜயகாந்த் மரணத்திற்கு வராதது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் சங்கத்தை வாழவைத்த கேப்டன் விஜயகாந்த் பெயரை புதியதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்திற்கு வைக்க வேண்டும் என மக்கள் கோபத்துடன் கோரிக்கையை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க நியூ இயர் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விஜயகாந்த் சமாதியில் நடிகர்கள் ஒவ்வொருவராக வந்து மரியாதை செலுத்திய போது, அங்கிருந்து பத்திரிகையாளர்கள் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருவது பற்றி கேட்க, கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் பெயரை தான் வைக்க வேண்டும் என பூசி முழுகிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் என்று பெயர் வைக்கப்படும் என்கின்ற உறுதிமொழியை கொடுப்பார்கள் என பலரும் எதிர்பார்க்க, ஆனால் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு எடுப்போம், பொதுக்குழு கூட்டம் கூட்டி முடிவு எடுப்போம், என்று சாக்கு போக்குகளை சொல்லி நலுவிக்கொண்டனர் நடிகர் சங்கம் முக்கிய நிர்வாகிகள்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என மக்கள் கோபத்துடன் தெரிவித்து வருவது பற்றி, விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, பேசியதாகவும், அப்போது சினிமா துறையில், குறிப்பாக நடிகர் சங்கத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நடிகர் ஒருவர், அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் மக்கள் உணர்ச்சி பொங்க கத்துவார்கள், அதன் பின்பு அவர்களே விஜயகாந்தை மறந்து விடுவார்கள்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவங்கள் இருந்திருக்கிறார்கள், அவர்களை விடவா விஜயகாந்த், நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயரையெல்லாம் எப்படி வைக்க முடியும், அதனால் தற்பொழுது செயற்குழு கூட்டம் கூட்டி முடிவெடுப்போம், பொதுக்குழு கூட்ட முடிவெடுப்போம் என்று மழுப்பி விட்டு வாருங்கள், கட்டடம் கட்டி முடிக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம், எதிர்காலத்தில் நடிகர் சங்க வளாகத்தில் அமைய இருக்கும் எதாவது ஒரு மண்டபம், அல்லது ஒரு ப்ளாக்க்கு வேண்டுமானால் விஜயகாந்த் பெயரை வைத்து குறித்து பேசி முடிவு எடுக்கலாம் என்று அந்த முக்கிய நடிகர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.