நடிகர் விஜயகாந்த் முதுகில் மனம் உடைய செய்த மூன்று துரோகிகள்…

0
Follow on Google News

மறைந்தாலும் தமிழக மக்களின் இதயங்களின் குடியிருக்கும் கேப்டன் விஜயகாந்த், சினிமா, அரசியல் என அவர் நுழைந்த இடமெல்லாம் ஆளுமைமிக்க தலைவராகவும், மக்கள் மத்தியில் மாற்றத்துக்கான தலைவராக இருந்து வந்த விஜயகாந்தை நேரடியாக எதிர்கொள்ள முடியாத எதிரிகள் துரோகிகள் மூலம் விஜயகாந்தை அரசியலில் இருந்து வீழ்த்தினார்கள் என்பது தான் வரலாறு.

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதை தனது வழக்கமாக கொண்ட விஜயகாந்த் தமிழக முதல்வராக அரியணையில் அமர்த்த தவறிய தமிழக மக்களுக்கு இனி எங்கே கிடைக்கப்போகிறது இது போன்ற மக்களுக்கான தலைவர், சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள், ஆனால் சினிமாவில் ரமணா என்கிற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்து உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் அடியெடுத்து வைத்தவர் கேப்டன்.

செப்டம்பர் 14, 2005 அன்று, மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்குவதாக விஜயகாந்த் அறிவித்தார்.கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் ஆதீக்கத்தில் இருந்தபோது, சொந்தமாக கட்சியைத் தொடங்கி, அவர்களை கலங்கடித்தார் விஜயகாந்த். கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா – கருணாநிதி இருவருக்கும் சவால் மிக்க தலைவராக உருவெடுத்தார் கேப்டன்.

தனது கட்சிக்காக பிறரிடம் நன்கொடை கேட்காமல் தனது சொந்த பணத்தை செலவு செய்து கட்சியை நடத்தினார். 2011-ல் அதிமுகவுடன் இணைந்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றார். அதன்பின் சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜெயலலிதாவை பார்த்து குனிந்து கும்பிடு போட்ட கூட்டத்திற்கு மத்தியில் நாக்கை மடக்கி நெஞ்சை நிமிர்த்து கர்ஜித்த கேப்டன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

அதன் பின் தேமுதிக எம்எல்ஏக்களான அருண்பாண்டியன், அருண் சுப்பிரமணியன், கே பாண்டியராஜன், தமிழ் அழகன், மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன், சந்திரகுமார் மற்றும் சாந்தி ஆகியோரை பேரம் பேசி விலைக்கு வாங்கினார் ஜெயலலிதா. இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் தேமுதிகவின் பலம் 20 ஆக குறைந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அந்தஸ்தை இழந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் நீண்டகால நண்பர்களாக இருந்தவர்கள் தான் சுந்தர்ராஜன், அருண் பாண்டியன் மற்றும் சுரேஷ்குமார். விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியின் பொருளாளராக இருந்த இயக்குனர் சுந்தர்ராஜனுக்கு மதுரை மத்திய தொகுதியில் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் சீட் கொடுத்து, அவரை எம்.எல்.ஏ ஆக்கினார் விஜயகாந்த். ஆனால் ஜெயலலிதா – விஜயகாந்த் இடையில் நடந்த மோதலில் ஜெயலலிதாவால் விலைக்கு வாங்கப்பட்ட சுந்தராஜன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டார்.

இயக்குனராகவும், நடிகராகவும் இருந்த அருண்பாண்டியனை தேமுதிக சார்பில் பேராவூரணி தொகுதியில் நிற்க வைத்தார் விஜயகாந்த். அந்த தேர்தலில் வெற்றி பெற்று பேராவூரணி தொகுதியில் வென்றார் அருண் பாண்டியன். பின் இவரும் ஜெயலலிதாவால் பேரம் பேசப்பட்டு விலைபோனார். தொடர்ந்து பணத்தாசையால் கேப்டனுக்கு துரோகம் செய்து வெளியேறினார்கள் கேப்டனால் வளர்த்து விடப்பட்டவர்கள்.

விஜயகாந்தினால் வளர்ந்த நகைச்சுவை நடிகரான வடிவேலு விஜயகாந்த் உடன் ஏற்பட்ட மன கசப்பால் அவரை அவமதிக்கும் வகையில் பேசி வந்தார். அவ்வாறு வடிவேலு பேசியதை கூட விஜயகாந்த் பெரிதாக பொருட்படுத்தவில்லை. ஆனால் சுந்தர்ராஜன், அருண் பாண்டியன் மற்றும் சந்திரகுமார் ஆகிய இந்த மூவர் விஜயகாந்திற்கு செய்த துரோகத்தால் மிகவும் மனம் உடைந்து போனார் என்கிறார்கள் விஜயகாந்த் உடன் இறுதி வரை விசவாசமாக இருந்து பயணித்தவர்கள்.