கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு தங்கள் வேதனையை பதிவு செய்து, இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறார்கள், நடிகர் விஜய் நேரடியாக கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் கள்ளகுறிஞ்சி செல்வதற்கு முன்பு இந்த சம்பவம் குறித்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த விதத்தில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும், இனி மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்து விட கூடாது என்பதில் இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் கையாண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் கள்ளகுறிஞ்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் விஜய் பங்கேற்ற செய்தி பல ஊடகங்களில் வெளியானது. இந்த செய்தி தொடர்பாக செய்தி வாசிப்பாளரும் சின்னத்திரை நடிகையுமான அனிதா சம்பத் விமர்சனம் செய்து கமெண்ட் செய்துள்ளது மிக பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
அனிதா சம்பத் அந்த கமெண்டில், நாட்டுக்காக போராட போனபோது தீவிரவாதிகளை நேருக்கு நேர் தாக்கும்போது நெஞ்சில் குண்டுபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமா இருக்காங்க பாவம்” என கள்ளக்குறிச்சிக்கு விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சென்ற செய்திக்கு அனிதா சம்பத் கமெண்ட் செய்தது மிக பெரிய சர்ச்சையாக வெடித்து, அது விவாத பொருளாக மாறியது.
மேலும் அனிதா சம்பத் இந்த கமெண்ட் வைரல் ஆனதை தொடர்ந்து. விஜய் ரசிகர்கள் அனிதா சம்பத்தை கடுமையாக திட்டி விமர்சனம் செய்து வந்தனர். இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வைகையில், தன்னுடைய கமெண்ட்க்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அனிதா சம்பத்.
அதில், என்னோட கமெண்ட்ல விஜய் பத்தி இல்லவே இல்லை என தெரிவித்துள்ள அனிதா சம்பத், மேலும் நான் விஜயை எங்கயும் தவறாக குறிப்பிடவேயில்லை. விஜயின் அரசியல் வருகை குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல், இவ்வளவு வறுமையிலும் பணத்தைக் கொண்டுபோய் கள்ளச்சாராயம் குடுச்சு மருத்துவமனையில அட்மிட் ஆகியிருக்காங்க.
அவர்களை ஊடகங்கள் தியாகிபோல் காட்டுகின்றது. நான் ஊடகங்களை நோக்கிதான் அந்த கேள்வியை எழுப்பினேன். இது விஜயை நோக்கி வைக்கப்பட்ட விமர்சனம் கிடையாது. உலகத்துல எத்தனையோபேரு 5,10னு சேத்துவெச்சு பசங்கள படிக்க வெக்கறாங்க. அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்குற நம்ம ஊர்ல இப்படி ஊதாரித்தனமா சுத்துறவங்கள பாக்கும்போது ஆதங்கமா இருக்கு. உயிரிழந்தவர்களை பாவம்னு சொல்வதை விட அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள்தான் பாவம்.
கடவுள் அவர்களுக்கு இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர மன உறுதியைக் கொடுக்கவேண்டும். எனது பதிவை சரியாக புரிந்துகொண்டவர்களுக்கு நன்றி என அனிதா சம்பத் விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் விஜய்யை குறிப்பிடவில்லை என்றால், விஜய் குறித்த செய்தியில் எதற்காக கமெண்ட் செய்யவேண்டும் என விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அனிதா சம்பத்தை கடமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.