அடுத்த பத்து வருடத்துக்கு ரஜினி பக்கத்துல கூட விஜய் போக முடியாது.. புதிய சாதனை படைத்த ரஜினி…

0
Follow on Google News

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ச ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம், விஜயின் பீஸ்ட் படத்தில் அடி வாங்கிய இயக்குனர் நெல்சனுக்கு இது கம்பேக் படமாக அமைந்துள்ளது இசையமைப்பாளர் அனிருத்தின் இசை கூடுதல் சிறப்பு என்றும் விமர்சனங்கள் வந்தன.

இவ்வாறு படக்குழுவினர் எதிர்பார்க்காத அளவிற்கு மாபெரும் ஹிட் அடித்த ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. ஜெயிலர் ஒட்டுமொத்தமாக 650 கோடிக்கும் மேலாக வசூல் செய்து தயாரிப்பு நிறுவனத்தையும் பட குழுவினரையும் உற்சாகப்படுத்தியது. இவ்வாறு ஜெயிலர் எதிர்பாராத வசூலை அள்ளிக் கொடுத்ததால், உற்சாகம் அடைந்த கலாநிதிமாறன் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஆடம்பர சொகுசு கார்களை பரிசளித்து படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

இப்படி மிகப்பெரிய ஹிட் அடித்து 650 கோடி வசூலை அசால்டாக தட்டிய ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் முறியடித்து விடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், விஜயின் லியோ இப்போது 600 கோடி வசூலை எட்டவே திணறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்களை வந்து கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் ஜெயிலர் படம் தீபாவளியை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வகையில், ஜெயிலர் படம் இதுவரை தொலைக்காட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 8.29 டிஆர்பிஐ பெற்றிருக்கிறது. இதனால் மீண்டும் கலாநிதி மாறன் ஏகப்பட்ட லாபத்தை அடைந்திருக்கிறார். ஏற்கனவே திரையரங்குகளில் 650 கோடி வசூலை அள்ளிக் கொடுத்த ஜெயிலர் படம், இப்போது தொலைக்காட்சியிலும் டி ஆர் பி ரேட்டிங்கை எகிற விட்டு வெற்றிக் கொடி ஏற்றியுள்ளது.

மேலும், வெள்ளித் திரையில் மட்டுமல்ல சின்ன திரையிலும் ஜெயிலர் படம் செய்த சாதனையை இனி பத்து வருடங்களுக்கு எந்த படத்தாலும் முறியடிக்க முடியாது என்று ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இணையம் முழுவதும் காக்கா கழுகு விவாத போர் நடைபெற்று வரும் சூழலில், ஜெய்லர் படத்திற்கு தொலைக்காட்சியில் கிடைத்துள்ள வரவேற்பு விஜய் ரசிகர்களை சூடேற்றி உள்ளது. வயசானாலும் சூப்பர் ஸ்டார்க்கானா மவுசு இன்னும் குறையவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிடும் என்ற சூழல் இருக்கும் நிலையில், லியோ படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்காதது லோகேஷின் கரியரில் முதல் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் லோகேஷ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே, இயக்குனர் நெல்சன் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை எடுத்து பயங்கரமாக அடி வாங்கி பின்னர், ரஜினியை வைத்து ஜெயிலர் படம் எடுத்து ஹிட் கொடுத்து மேலே வந்திருக்கிறார். இப்போது இயக்குனர் லோகேஷும் லியோ படத்தில் வாங்கிய அடிக்கும் ரஜினி படத்தின் மூலம் லோகேஷ் கம் பேக் கொடுப்பார் என நம்பப்படுகிறது. அந்த வகையில் விஜய்யினால் சினிமா கேரியரை தொலைத்த இயக்குனர்கள் ரஜினியால் சினிமாவில் மறு வாழ்வு பெற்று வருவது சினிமாவில் வழக்கமாக தொடர்கிறது.