வருகிற 2023 பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்தது. இந்த இரண்டு படத்தையும் வாங்கி தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் முயற்சி செய்தது, இதில் துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை மட்டும் பெற்றது ரெட் ஜெயின்ட்.
ஆனால் வாரிசு படத்தை எந்த ஒரு காரணத்திற்கும் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கக் கூடாது என்று படத்தின் தயாரிப்பாளருக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கு காரணம் பீஸ்ட் படத்தின் போது விஜய் மற்றும் உதயநிதி இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் உதயநிதி கட்டுப்பாட்டில் இருப்பதால் துணிவு படம் பல திரையரங்குகளில் வெளியிட முன் வந்தனர்.
ஆனால் வாரிசு படம் திரையரங்கு கிடைக்காமல் தவித்து வந்தது. வாரிசு படத்தை வாங்கிய லலித்திடம் நேரடியாக படத்தை நீங்கள் வெளியிட்டால் வாங்கமாட்டோம், உதயநிதி மூலம் வாங்க என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் கடும் அப்சட்டில் இருந்துள்ளார் தயாரிப்பாளர். உடனே தன்னுடைய முடிவை மாற்றி கொண்ட விஜய், நீங்கள் யாரிடம் கொடுத்து எப்படியோ படத்தை வெளியிடுங்கள் என தயாரிப்பாளரிடம் தெரிவித்துவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ரெட் ஜெயின்ட் நிறுவனத்திடம் வரிசு படம் தயாரிப்பாளர் உதவியை நாடியுள்ளார். ஆனால் அவர்கள் துணிவு படம் பெரும்பாலான திரையரங்குகளில் விற்பனை செய்து விட்டோம், நீங்கள் முன்பே வந்திருக்க வேண்டும் என்று கை விரித்து விட்டனர். இந்நிலையில் பொங்கலன்று திரையரங்குகள் கிடைக்காமல் மிக குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டால் மிக பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்த வாரிசு தயாரிப்பாளர்.
மேலும் ஒரே நேரத்தில் குறைந்த திரையரங்கில் வாரிசு படமும், அதிக திரையரங்குகளில் துணிவு படம் வெளியானால், துணிவு படத்தின் வசூலில் பாதி கூட வாரிசு படம் வசூலிக்க முடியாத சூழல் ஏற்படும். இதனால் விஜய்க்கு மிக பெரிய பின்னடைவு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டுள்ளார் விஜய். தேதி மாற்றி வாரிசு படத்தை வெளியிட்டால் நடிகர் அஜித்துக்கு பயந்து கொண்டு பின் வாங்கிவிட்டார் விஜய் என்கிற தகவல் வெளியாகும்.
இதனால் திட்டமிட்டு தெலுங்கு சினிமாவில் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளனர் படக்குழுவினர். பண்டிகை நாட்களில் தெலுங்கு சினிமாவில் டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை இல்லை என்கின்ற ஒரு சர்ச்சையை அங்கு உருவாக்கியுள்ளார்கள், ஆனால் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருமே தெலுங்கு சினிமா உலகைச் சார்ந்தவர்கள். மேலும் இது டப்பிங் படம் அல்ல, நேரடி தமிழ் மற்றும் தெலுங்கு படம்.
இருந்தாலும் நடிகர் விஜய்யின் மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதற்காக திட்டமிட்டு இது போன்ற சர்ச்சையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தெலுங்கு சினிமா சர்ச்சையை காரணம் காட்டி பொங்கலன்று வெளியாவதற்கு பதில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று வாரிசு படம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை விஜய் உணர்ந்திருப்பார் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.