அரசியல்வாதிகளுக்கு என்று ஒரு சில குணம் உண்டு, அதில் மக்களோடு மக்களாக சிரித்து பழக வேண்டும். குறிப்பாக மக்களோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் நடிகர் அவர் சார்ந்த சினிமா துறையில் நடிகர் சங்க நிகழ்வில் கூட கலந்து கொள்ளாமல் புறக்கணித்து, குறிப்பாக சினிமா துறையில் இருக்கின்றவர்களிடம் கூட நெருங்கி பழகி அன்பை பரிமாறி கொள்ளாதவர் விஜய்.
அந்த வகையில் ஒரு அரசியல்வாதிக்கான குணம், இதுவரை விஜய்க்கு இருந்ததில்லை என்றும், இனிமேல் தான் அவர் ஒரு அரசியல்வாதிக்கு தேவையான குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் விஜயை நன்கு அறிந்த சினிமா துறையை சார்ந்தவர்கள். எம்ஜிஆர் சினிமாவில் வெற்றி படங்களை மட்டும் கொடுத்ததின் மூலம் அரசியலுக்கு வந்து வெற்றிபெறவில்லை.
வருடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பத்தில் ஒரு காங்கிரஸ் தொண்டனாகவும், அதன் பின்பு அண்ணாதுரை திமுக தொடங்கியதும் தன்னுடைய அரசியல் பயணத்தை திமுகவில் இணைத்து கொண்ட எம்ஜிஆர், திமுகவிற்காக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, ஒரு நடிகன் என்கின்ற இமேஜை தாண்டி மக்களோடு ஒரு நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர்.
குறிப்பாக தமிழக தாய்மார்களையும் ஏழை மக்களையும் எம்ஜிஆர் அரவணைத்து கவர்ந்த விதம் என்பது ஒரு நடிகன் என்பதை தாண்டி, ஒரு அரசியல்வாதிக்கு தேவையான அடிப்படை குணங்கள் எல்லாமே எம்ஜிஆரிடம் வெளிப்பட்டது. இப்படி ஒவ்வொரு அடியாக அரசியலில் எடுத்து வைத்த எம்ஜிஆர், திரைப்படத்தில் நடித்து வெற்றி பெற்றதால் மட்டுமே அரசியலில் வென்றார் என்பதை ஏற்று கொள்ள முடியாது என்கிறன்றனர் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.
அந்த வகையில் நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு என சில அடிப்படை குணங்கள் வேண்டும். அதில் குறிப்பாக ஒரு புன்னகை முகம் வேண்டும், ஆனால் விஜய் சினிமாவில் சிரிப்பதை தவிர்த்து நேரில் அவர் சிரிப்பதை காண்பதே மிக அரிது. அதாவது சினிமாவில் பணம் வாங்கிக்கொண்டு சிரித்து நடிப்பது வேறு, அன்பால் ஏழை மக்களை தன்னுடைய சிரிப்பால் அவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும், அந்த ஒரு குணம் எம்ஜிஆர்க்கு அடிப்படையிலே இருந்தது.
மேலும் நடிகர் விஜய்யின் சமீபகால நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் அதில் மிகப்பெரிய அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சமாகும். குறிப்பாக மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்திய விஜய் 234 தொகுதிகளில் உள்ள சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் பரிசுகளை வழங்கியது ஒரு நற்செயலாக இருந்தாலும் கூட, அதில் 234 தொகுதி என்று குறிப்பிட்டு தேர்ந்தெடுத்ததில் அதில் ஒரு அரசியல் இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது
அதேபோன்று காமராஜர் பிறந்த நாளில் விஜய் பயிலகம் என்று தொடங்கப்பட்டுள்ளது, மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்தாலும், அதை காமராஜர் பிறந்த தினத்தில் ஆரம்பித்ததில் அதில் விஜயின் அரசியல் வெளிப்பட்டு விட்டது. இந்த நிலையில் விஜய் திடீரென்று மாணவர்கள் சந்திப்பு, விஜய் பயிலகம் என்பதெல்லாம் விஜய் அரசியல் வருகைக்காக செய்யும் செயல் தானே என்பது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு இதுபோன்ற அரசியல் அடிப்படை குணங்கள் எதுவும் இல்லாமல் தன்னுடைய சினிமா இமேஜ் மூலமே அவருக்கு உள்ள வரவேற்பை பயன்படுத்தி, அரசியலுக்கு வர இருக்கும் நிலையில், தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டே அந்த இமேஜ் மூலம் தன்னுடை அரசியல் குணங்களை வளர்த்து கொண்டு அரசியலில் முன்னேற வேண்டும்.
ஆனால் அரசியலில் என்ட்ரி கொடுப்பதால் விஜய் சினிமாவில் நடிப்பதை நிறுத்தினால், அரசியலில் படு தோல்வியை அடைவது மட்டுமில்லாமல், விட்டு சென்ற சினிமாவ வாழ்க்கையை மீட்டெடுக்க முடியாமல், தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டும் கொண்டது போன்றாகிவிடும் விஜய் நிலமை என்கிறார்கள் மூத்த அரசியல் பார்வையாளர்கள்.