எச்சரித்து கேட்காத விஜய்… தனி ஒருவனாக புகுந்து நினைத்ததை சாதித்த தயாரிப்பாளர்…

0
Follow on Google News

விஜய் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை திட்டமிட்டு புறக்கணிப்பதாக பிரபல தயாரிப்பாளர் AM சவுத்ரி தேவர் பகிரங்கமாக நடிகர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில், குறிப்பிட்டு சில தலைவர்கள் பெயரை குறிப்பிட்டு பேசிய விஜய் பசும்பொன் முத்துராமலிக்க தேவர் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என சௌத்திரி தேவர் மிக கடுமையாக விஜயை எதிர்க்க தொடக்க புள்ளியாக அமைந்தது.

தொடர்ந்து விஜயை மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் சௌத்ரி தேவர். தொடர்ந்து விஜய்க்கு எதிராக பல கருத்துக்களை முன் வைத்து வருகிறார்கள் அதில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தவிர்த்து விட்டு ஒருவர் அரசியல் செய்தால் எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்று தென் மாவட்டங்களில் விஜய் படம் ஓடுகிறது என்றால் அதற்கு காரணம் எங்களுடைய சமூகத்தினர் தான், உறுதியாக இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக அவர்கள் மாறுவார்கள், மன்றங்கள் அனைத்தும் கலைக்கப்படும் என எச்சரித்திருந்த சௌத்ரி தேவர்.

மேலும் அனைத்து தலைவர்களையும் பொதுவாக சொல்லியிருந்தால் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம். குறிப்பிட்டு தேவரை விஜய் தவிர்த்தார் என்றால் நாங்கள் யார் என்பதை காட்ட நேரிடும், அந்த வகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை உச்சரிக்காமல் விஜய் அரசியலுக்குள் வந்தால் அது மிகப் பெரிய வீழ்ச்சியை சந்திக்கும், எங்களுடைய மக்களும் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் தான்.

அப்படி இருக்கும்போது எப்படி விஜயை தலைவராக ஏற்றுக் கொள்வார்கள் என சௌத்ரி தேவர் மிக கடுமையாக விஜயை எச்சரித்து இருந்தார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அனுவித்து மாறியதை செலுத்துவதும் மட்டுமில்லாமல்,விஜய் பசும்பொன் முத்துராமலிக்க தேவர் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என சௌத்ரி தேவர் கோரிக்கை வைத்திருந்தார்.

ஆனால் விஜய் அவருடைய வீட்டில் பசும்பொன் தேவர் உருவ படத்திற்கு கூட மலர் தூவி மாறியதை செலுத்தவில்லை, இதற்கு மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்த சௌத்ரி தேவர். விரைவில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ‘தளபதி விஜய் நூலகம்’ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கப்படும் என அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அப்போது தளபதி விஜய் நூலகத்தில், தேவர் குறித்த புத்தகங்கள் இடம் பெற வேண்டும் என சௌத்ரி தேவர் தெரிவித்து இருந்தார், ஆனால் சமீபத்தில், சென்னையில் சில இடங்களில் தளபதி விஜய் நூலகம் திறக்கப்ட்டது, அதில் தேவர் தொடர்பான புத்தங்கள் எதுவும் இடம் பெறவில்லை, இந்த தகவல் அறிந்த சௌத்ரி தேவர். சென்னை குரோம்பேட்டையில் புதிதாக அமைத்துள்ள தளபதி விஜய் நூலகதில் அதிரடியாக நுழைந்த சௌத்ரி தேவர்.

அங்கே தேவர் புத்தகங்களை வழங்கி, அந்த நூலகத்தில் இடம்பெற செய்தார். இது குறித்து பேசிய சௌத்ரி தேவர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விஜய் மக்கள் இயக்க நூலகங்களுக்கு தேவர் புத்தகங்களை வழங்க உள்ளேன் இனி இனி வரும் காலங்களில் தேவரின் சக்தியையும் அரசியலையும் விஜய் மற்றும் விஜய் மன்றத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.