நடிகர் விஜயின் சினிமா ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் விஜய் வைத்து நாளைய தீர்ப்பு என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார். முதல் படமே படுதோல்வியை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகர் விஜய் வேறு ஒரு இயக்குனர்களின் படத்தில் நடிக்க வைத்து அவருக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று வந்துவிட வேண்டும் என விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முயற்சி செய்துள்ளார்.
ஆனால் எந்த ஒரு இயக்குனரும் விஜய் வைத்து படம் எடுப்பதற்கு முன்வரவில்லை. விஜயை ஒரு ஹீரோவாக கொண்டு வருவதற்கு நடிகர் விஜயின் தந்தை தொடர்ந்து விஜயை வைத்து படம் இயக்கினார், இதில் சில படங்கள் சொந்தமாகவே தயாரித்தார். விஜய் தந்தை இயக்கத்தில் விஜய் நநடித்த அனைத்து படங்களும் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.
இதனால் விஜய் தந்தைக்கு சுமார் 40 லட்ச ரூபாய் கடன் காரணமாக, அவருடைய வீட்டை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு சூழலில் சூழலில் தான் நடிகர் விஜயகாந்தை அணுகி தன்னுடைய மகன் உடன் இணைந்து விஜயகாந்த் நடிக்க வேண்டும், அப்போதுதான் விஜய் முதலில் ஒரு நடிகராக மக்கள் மத்தியில் அறியப்படுவார் என, அப்போது கேப்டன் பிரபாகரன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து உச்சத்தில் இருந்த நடிகர் விஜயகாந்த் அணுகினார் எஸ் ஏ சந்திரசேகர்.
சற்றும் யோசிக்காமல் உடனே செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து கொடுத்தார் விஜயகாந்த். இந்த படத்திற்கு பின்பு விஜய் என்கின்ற ஒரு நடிகர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். மேலும் அடுத்தடுத்து பூவே உனக்காக காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று ஒரு முன்னணி நடிகராக வந்தார் விஜய்.
அந்த வகையில் விஜய் குடும்பத்தினர் கடலில் தத்தளித்த போது, அவர்களை செந்தூரப்பாண்டி படம் மூலம் காப்பாற்றி கரை சேர்த்தவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய குடும்பம் 40 லட்சம் கடனில் தத்தளித்து வீட்டை விற்கும் நிலையில் இருந்ததை நடிகர் விஜய்யே தன்னிடம் தெரிவித்ததாக நமது தினசேவல் நியூஸ்க்கு அளித்த பேட்டியில் நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்தார்.