நடிகர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. விஜயகாந்த் பிறந்தயாளையொட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் திரை துறையை சேந்த பலரும் தொடர்ந்து விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜயகாந்த் பிறந்தநாள் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர் AM சௌத்ரி தேவர் நடிகர் விஜயை கடுமையாக விளாசியுள்ளார், தமிழ் திரையுலகில் நன்றி என்ற வார்த்தைக்கு மிக மிக பொருத்தமானவர் விஜயகாந்த் என தெரிவித்த AM சவுத்ரி தேவர் அதே நேரத்தில் நன்றிகெட்ட மனிதர் விஜயை தான் அம்பலப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்றும், அப்படி ஒரு நன்றி கெட்ட மனிதர் தான்.
விஜய் சில தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தோல் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் விஜய் ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு இதுவரை நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என வருத்த ப்பட்ட AM சவுத்ரி தேவர். இது நடிகர் விஜயின் மிகப்பெரிய துரோகம் என்றும், காரணம் விஜயகாந்த் இல்லை என்றால் இன்று விஜய் என்கின்ற ஒரு நடிகனே இல்லை.
நடிகர் விஜய்யை கையைப் பிடித்து செந்தூரப்பாண்டி படத்தில் தம்பி என்று விஜயகாந்த் அறிமுகப்படுத்தவில்லை என்றால் விஜய் என்று கடைசி வரையும் தொட்டபெட்டா ரோட்டு கடையில் முட்டை பரோட்டா என ரோட்டில் ஆடிக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும், அப்படி ஒரு சூழல் தான் விஜய்க்கு அமைந்திருக்கும், அதே போன்று விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு தொடர்ந்து பல படங்கள் விஜயகாந்த் நடித்ததால் தான் மிகப்பெரிய இயக்குனராகவும் எஸ் ஏ சந்திரசேகர் உருவெடுக்க முடிந்தது.
அந்த வகையில் விஜய் குடும்பத்தை வாழ வைத்தவர் விஜயகாந்த் ஆனால் அவருடைய பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை விஜய், அதே நேரத்தில் திருமாவளவன் விஜயை வாழ்த்துவதும் விஜய் திருமாவளவனை வாழ்த்துவதும், விஜய் ஒரு குறிப்பிட்ட ஒரு சாதி அரசியலை நோக்கி நகர்வதாக சந்தேகத்தை கிளப்பும் AM சவுத்ரி தேவர் ஏற்கனவே நடிகர் விஜய் ஒரு சாதி அடையாளத்துடன் காட்டப்பட்டு வரும் நிலையில்.
அந்த குறிப்பிட்ட சாதியை தூக்கி விஜய் பயணிக்க இருக்கலாம் என்றும் விஜயகாந்த் என்கின்ற ஒரு நல்ல மனிதருக்கு வாழ்த்து சொல்லக்கூட விஜய்க்கு மனம் இல்லை என்றால், நன்றி கெட்ட மனிதர்கள் என்றும் வெற்றி பெற முடியாது, நன்றி கெட்ட மனிதர்கள் தோற்றுத்தான் போவார்கள், அந்த வகையில் விஜயின் இந்த நன்றி கெட்ட செயலால் அரசியலில் அவர் வெற்றியிட முடியாது.
சினிமாவில் அவர் வெற்றியடைந்து கோடி கோடியாக சம்பாதித்திருக்கலாம் ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும், விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத விஜயின் செயல் நன்றி கெட்ட மனிதனாகத்தான் பார்க்கிறோம், அதே நேரத்தில் அவர் சாதி அரசியலை முன்னெடுப்பார் என்பது இன்று எங்களுக்கு தெரிய வருகிறது,
விஜயகாந்த் பிறந்தநாள் அன்று விஜயகாந்த் காலில் விழுந்து விஜய் ஆசீர்வாதம் வாங்கி இருக்க வேண்டும், ஊருக்கே கை கொடுத்தவர் விஜயகாந்த் ஆனால் அவருடைய மகன் சண்முக பாண்டி சினிமாவில் வருகிறார் ஆனால் அவருக்கு கை கொடுக்க ஆட்கள் இல்லை , விஜயின் இந்த சாதி அரசியலை மிக விரைவில் தோலுரிப்பேன் என தெரிவித்த AM சௌத்ரி தேவர். விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவிக்காதது விஜய்யின் மிகப்பெரிய நன்றி கெட்ட செயல் என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்