சுனா பானா இடத்தை காலி பண்ணு… என்னடா இது விஜய் அரசியலுக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

விஜய் அரசியல் என்ட்ரி கொடுக்க இருப்பது தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது. சமீப காலமாக நடிகர் விஜயின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர் அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு முன்பு நடிகர் விஜய் அரசியல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார்.

அப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பிரச்சினையில் சந்தித்தபோது, தனக்கு எதிராக பிரச்சனை செய்த்தவர்களை எதிர்த்து துணித்து போராட தைரியம் இல்லாமல் அவர்களிடம் சமரசம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வந்துள்ளார் விஜய். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தலைவா பட பிரச்சனையின் போது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவை எதிர்க்க துணிவு இல்லாமல்.

கைகட்டி அம்மா, நீங்க தான் காப்பாத்தணும் என ஜெயலலிதாவிடம் கெஞ்சுவது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு வெளியிட்ட சம்பவம் நடிகர் விஜயின் துணிச்சல் பற்றி அப்போதே பல கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில் நடிகர் விஜய் முழு அரசியல் வாதியாக மாறும்போது அவருக்கான எதிர் தாக்குதல் என்பது ஆளும் தரப்பிலிருந்து நிச்சயம் கடுமையாக இருக்கும்.

குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் ஆளும் தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தால், நிச்சயம் ஆளும் தரப்பில் இருந்து விஜய்க்கு எதிரான தாக்குதல் கடுமையாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அந்த வகையில் நடிகர் விஜய் ஆளும் தரப்பின் எதிர்ப்புகளை தாண்டி தான் அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

ஏற்கனவே மத்திய அரசை தொடர்ந்து சீண்டி வந்த நடிகர் விஜய், வருமான வரி சோதனையை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. இதன் பின்பே மத்திய பாஜக அரசு சீண்டுவதை கைவிட்டார் நடிகர் விஜய். இந்த நிலையில் விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த பின்பு மத்திய பாஜக அரசு விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அதை எதிர்க்கும் அளவுக்கு விஜய்க்கு துணிவு இருக்குமா? என்பது மிக பெரிய கேள்வி குறியாகவே உள்ளது.

இதற்கு முன்பு நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஒரு சிறிய அழுத்தம் மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக கடும் நெருக்கடிகளை மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் தரப்பினரிடம் இருந்து வரும் கடும் வந்தால், அந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு அரசியலில் வெற்றியை அடைவரா.?

அல்லது எப்படி நடிகர் ரஜினிகாந்த் 234 தொகுதிகளின் தனித்துப் போட்டியிடுவேன் என்று அரசியல் அறிவிப்பை வெளியிட்டு சுமார் இரண்டு வருடங்கள் இதோ அரசியலுக்கு வருகிறேன் என அவர்கள் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு கடைசி நேரத்தில் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி காலை வாரி விட்டாரோ.? அதேபோன்று தனக்கு வரும் நெருக்கடிகளை துணிந்து சமாளிக்க முடியாமல் விஜயும் காலை வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றது என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த வகையில் ஆடியோ வெளியிட்டு விழாவில் அரசியல் பன்ச் பேசிவிட்டு சும்மா இருக்கும் ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, உம்முனு , சும்மா ஜம்முனு இருப்பது இல்லை அரசியல் களம் என்பதை விஜய் நன்கு அறிந்த பின்பு தான் அரசியலில் என்ட்ரி கொடுக்கிறாரா.? அல்லது அரசியலில் என்ட்ரி கொடுத்த பின்பு தான் என்னடா இது ஒரே ரணகளமாக இருக்கு, சுனா பானா இடத்தை காலி பண்ணு என அரசியலில் தாக்கு பிடிக்காமல் ஓட போகிறாரா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.