விஜய் போட்ட கடும் கட்டுப்பாடு… கப் சிப் என இருக்கும் இடம் தெரியாமல் இருந்த ரசிகர்கள்…

0
Follow on Google News

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

பொதுவாகவே விஜய் மக்கள் மன்றங்கள் சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் ஆரவாரத்துடன் விசில் சத்தம் அனல் பறக்க அந்த நிகழ்ச்சி இருக்கும். ஆனால் தற்போது நடந்து முடிந்துள்ள விஜய் மாணவர்கள் சந்திப்புக்கான நிகழ்ச்சி எந்த ஒரு ஆரவாரம் இல்லாமல், மிக கட்டுப்பாடுடன் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் மாணவர்களுக்கு விஜய் சால்வை அணிவிக்கும் பொழுது அதை எடுத்துக் கொடுக்கிறேன் என்று ஒரு நான்கு பேர் சுற்றி நின்று பிலிம் காட்டுவது போன்ற எந்த ஒரு நிகழ்வும் இருக்க கூடாது.

விஜய் தானே சால்வையை எடுத்து மாணவர்களுக்கு அனுவித்து கௌரவ படுத்தும் வகையில் இருந்தது. குறிப்பாக மேடையில் மாணவர், பெற்றோர் மற்றும் விஜய் மட்டுமே இருக்கும் வகையில், விஜய் மக்கள் மன்றம் சார்பில் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. மாணவர்கள் மேடைக்கு வரும்போது அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று பெயரில் வாங்க சீக்கிரம், போங்க… போங்… என்று மாணவர்களை இங்கே தள்ளுவது அங்கே தள்ளுவது போன்ற தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பதற்காகவே,

விஜய் இந்த நிகழ்வில் மேடையில் மக்கள் மன்ற நிர்வாகிகள் யாரையுமே அனுமதிக்கவில்லை என்றும், மாணவர்கள் அவர்களாகவே மேலே வந்து பரிசுகளை பெற்று செல்லும் வகையில் இந்த நிகழ்ச்சியை விஜய் மிக கவனமாக பார்த்து பார்த்து செய்துள்ளார். அதேபோன்று விஜய் மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சினிமா துறையைச் சார்ந்த பல தொகுப்பாளினிகளும் தொகுப்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்புக்காக முயற்சித்துள்ளார்கள்.

ஆனால் அவர்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல், புதிய ஒரு தொகுப்பாளினிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஜய், இதற்கு காரணம் இது மாணவர் நிகழ்ச்சி என்பதால் சினிமா துறையைச் சார்ந்த தொகுப்பாளினிகள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால், அது ஒரு சினிமா சாயல் கொண்ட நிகழ்ச்சியாக, மேலும் அவர்கள் செய்கிற அட்ராசிட்டி முகம் சுளிக்கும் வகையிலும் அமையும் என்பதால் முன்னணி தொகுப்பாளினிகளை புறக்கணித்துள்ளார் விஜய்.

அந்த வகையில் மிக நேர்த்தியாக திட்டமிடளுடன் இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாணவர்களுக்கான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக செயல்பட்டு இருக்கிறார். குறிப்பாக நடிகர் விஜய் மேடைகளில் மாணவ மாணவர் மத்தியில் பேசுகையில், மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோர்களை படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோரின் வரலாறு தெரிந்தவர்கள் மிகக் குறைவே. அந்த வகையில் தற்பொழுது விஜய் ஒரு விஷயத்தை சொல்லும்போது, அது இன்றைய தலைமுறை கவர்ந்து, விஜய் சொல்கிறாரே? அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்பதற்காகவே காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை பற்றி படித்து தெரிந்து கொள்வார்கள்.

விஜயின் மாணவர்கள் சந்திப்பின் பேச்சில், அம்பேத்கார், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு விதையை மாணவர்கள் மத்தியில் விஜய் விதைத்துள்ளது அனைத்து தரப்பினரையும் பாராட்ட வைத்துள்ளது. அந்த வகையில் விஜய்யின் ஆரம்பமே மிக திட்டமிடலுடன், கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்துள்ளது. குறிப்பாக விஜய்யின் கடும் கட்டுப்பாடுகளை விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பின்பற்றியுள்ளது, விஜய்யின் கட்டு கோப்பான கட்டைமைப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.