நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவருடைய அரசியல் நகர்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விஜய் அரசியல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் கிட்டத்தட்ட 150 சட்டமன்றத் தொகுதிகள் வரை கிளை வாரியாக பூத் கமிட்டி வரை விஜய் மக்கள் மன்றம் அமைத்துள்ளது. விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே அவருடைய ரசிகர் மன்றங்களை அரசியல் கட்டமைப்பாக மாற்றியவர்.
விஜயகாந்த் 2005இல் தேமுதிக என்கின்ற புதிய கட்சியை தொடங்கும் போது, அவருடைய ரசிகர்கள் மன்றம் மிகப்பெரிய கட்டமைப்பாக உயர்ந்து, அப்போது அவருடைய அரசியல்ளுக்கு துணையாக நின்றது மேலும் விஜயகாந்த் 2005 இல் அரசியல் கட்சி தொடங்கினாலும் கூட, அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே 2001 இல் நடந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் அவர்கள் ரசிகர் மன்றம் சார்பாக போட்டியிட்டு சுமார் 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றனர்.
இதே போன்று விஜயகாந்தை பின்பற்றிய நடிகர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய ரசிகர் மன்றங்களை அரசியல் கட்டமைப்பாக மாற்றி வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட 150 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் பூத்து கமிட்டி வரை கிளை வாரிய அமைக்கப்பட்டுள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள். மேலும் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் விஜய் ரசிகர் மக்கள் மன்றம் சார்பில் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
தேர்தலில் ஒரு நடிகருக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் எண்ணம் ஓட்டம் இருந்தாலும், அவர்களை வாக்குச்சாவடியில் அழைத்து அந்த நடிகருக்கு வாக்கை பதிய வைக்க வேண்டிய கடமை தான் அரசியல் அடிப்படை கட்டமைப்பு என்பது. அந்த வகையில் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது மிகப்பெரிய வெற்றியை அவர் பெறுவதற்கு காரணமாக இருந்தது அவர் நடிகர் மற்றும் அவருக்கான ரசிகர் கூட்டம் என்பதை தாண்டி அடிமட்டத்தில் இருந்த அவருடைய அரசியல் கட்டமைப்பு தான் என்பது குறிப்பிட தக்கது.
அந்த வகையில் அடுத்தடுத்து நடிகர் விஜயகாந்த் தவிர மற்ற பல நடிகர்கள் அரசியலில் ஜொலிக்காமல் போனதற்கு காரணம் அவர்களுக்கான கட்டமைப்பு என்பது தான். அந்த வகையில் நடிகர் விஜயகாந்தை பின்பற்றி அரசியல் கட்டமைப்பை வலுவாக அமைத்து வருகிறார் நடிகர் விஜய். அவர் அரசியல் கட்சி தொடங்கியதும் அந்த கட்டமைப்பு மிகப்பெரிய பலமாக நடிகர் விஜய்க்கு இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
விஜயகாந்த் ஃபார்முலாவை அப்படியே பின்பற்றி அரசியலுக்கு வரவிருக்கும் நடிகர் விஜய்,கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய ரசிகர்களை களத்தில் இறங்கி அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபடுத்தி வந்தவர் நடிகர் விஜய். அந்த வகையில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் உணவு வழங்குவது என சுமார் ஓராண்டுக்கு மேலாக விலையில்லா உணவகம் என்கின்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
அதேபோன்று இணையதள வாயிலாக கண்தானம் செய்வது குறித்து விஜய் ரசிகர் மன்றம் சார்பில் செயல்பட்டு வருகின்றனர். இது போன்று அடிப்படை மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்பு அரசியலில் களத்தில் இறங்கி வேலை பாக்குவதற்காக ஒரு கட்டமைப்பாக விஜய் ரசிகர்களின் இன்றைய செயல்பாடு அமையும்.
மேலும் நான் அரசியலுக்கு வருகிறேன், எல்லாம் செய்து விட்டேன் இன்னும் அம்பு விடுவது தான் பாக்கி என ரஜினிகாந்த் போன்று சும்மா கிடந்த ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு இறுதியில் ஆல்வா கொடுக்காமல், சத்தமே இல்லாமல் அணைத்து கட்டமைப்பையும் உருவாக்கி வரும் நடிகர் விஜய்யின் அரசியல் ஆரம்பம் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.