இதெல்லாம் ஒரு பொழப்பா.? விஜய் செய்த சில்ர தனம்… நார் நாராக கிழித்த பாதிக்கப்பட்ட மக்கள்…

0
Follow on Google News

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் கலந்து கொண்டிருந்த போது, அதிரடியாக படப்பிடிப்பு தளத்தில் நுழைந்த வருமான வரித்துறையினர் விஜயை தட்டி தூக்கி இன்னோவா காரில் கோழி அமுக்குவது போன்று அமுக்கிக் சென்னைக்கு அழைத்து சென்றனர்.அப்போது நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் இருக்கிறார் என்கின்ற தகவல் பரவியதை தொடர்ந்து.

வருமான வரி சோதனை முடிந்து விஜய் மீண்டும் நெய்வேலி படப்பிடிப்பிற்கு வந்தபோது ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கே கூடியிருந்த போது, வேன்மீது ஏறிக்கொண்டு அந்த ரசிகர் கூட்டத்தை செல்பி எடுத்தார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சி பெயரை அறிவித்த விஜய், களத்தில் இறங்கி அரசியல் செய்வார் என மக்கள் எதிர்பார்த்தால், ரசிகர்களை கூட்டமாக சேர்த்து அடிக்கடி செல்ஃபீ எடுத்து விளையாடி கொண்டிருக்கும் விஜய், செல்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

விஜய் இவ்வாறு செல்பி அரசியல் செய்வதால் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ரசிகர்கள் எந்த ஒரு முன் அனுமதி பெறாமல் பொது இடத்தில பெரும் கூட்டம் கூடுவது அந்த பகுதியில் போக்குவரத்து மிக பெரிய இடையூறு ஏற்படுகிறது மேலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.

சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் சமீபத்தில் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தகவல் அறிந்து விஜய் ரசிகர்கள் பெருமளவு கூடி மிகப்பெரிய போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். ஆனால் ரசிகர்கள் அட்ராசிட்டியை பொறுத்துக் கொண்ட காவல் துறை அவர்கள் தடியடி நடத்தினால் தற்பொழுது விஜய் அரசியல் கட்சி தொடங்கியதால் ஆளும் திமுக அரசு விஜயை ரசிகர்களை அடித்து ஒடுக்க பார்க்கிறது என்று இவர்கள் அதை அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்பதால் தமிழக காவல் துரையினர் பொறுமையாக இருந்தனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் போன்று பாண்டிச்சேரியில் விஜய் கலந்து கொண்ட படப்பிடிப்பில் ரசிகர்களை ஓன்று கூட்டி, வேன் மீது நின்று செல்பி எடுத்து விளையாட ஆசைப்பட்டுள்ளார். உடனே புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் தெரிவிக்க, விஜய் ரசிகர் மன்றங்கள் வழியாக வாட்ஸ் ஆப்பில் விஜய் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருக்கிறார் என்கிற தகவல் பரவியதை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

இப்படி ரசிகர்களை உசுப்பேத்தி விட்டு, பெரும் கூட்டத்தை கூட்டி, தான் நினைத்தது போன்று ஜம்முனு செல்பி எடுத்துவிட்டு கம்முனு கிளம்பி போய்விட்டார், ஆனால் விஜய் அங்கே படப்பிடிப்பு நடத்துவது தெரிந்து காலை முதலே ஏராளமான ரசிகர்கர் குவிந்ததால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது, முன்னறிவிப்பு இன்றி அதிகளவு ரசிகர்கள் கூடியதால், அச்சாலையெங்கும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் ட்ராபிக் சரி செய்ய மிகவும் சிரமப்பட்டனர்.

அங்கே கூடியிருந்த சாலைகளை ஆக்கிரமித்து கொண்டு போக்குவரத்துக்கு மிகப்பெரிய இடையூற ஏற்படுத்திய தளபதி தளபதி என கூச்சலிட்டு பொதுமக்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஓவர் அட்ராசிட்டி செய்த விஜய் ரசிகர்களின் அட்டூழியதால் அப்பகுதியில் பஸ்கள் செல்ல முடியமால் திரும்பி செல்லத்தொடங்கின, இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் , வேலைக்கு செல்லும் தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைவரும் கடும் கோபத்துக்கு உள்ளாகி, விஜயை கழுவி கழுவி உத்தியதை பார்க்க முடிந்தது.

மாலை வேன் மீது ஏறி விஜய் ரசிகர்களை நோக்கி கை அசைத்து செல்பி எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார். இதன் பின்பே அங்கிருந்து ரசிகர் கூட்டம் கலைய தொடங்கியது. இந்நிலையில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய், மக்களின் உரிமையாக களத்தில் இறங்கி அரசியல் செய்யவேண்டும், ரசிகர்களை கூட்டம் கூட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செல்பி எடுத்து விளையாடுவது சிறு பிள்ளை தானமாக உள்ளது என கடும் விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.